அண்ணாமலைக்கு ஏன் 2 வருடம் சிறை தண்டனை கொடுக்கல - இண்டிகோ மீது காயத்ரி ரகுராம் ஆவேசம்

 
g

கடந்த டிசம்பர் 10ஆம் தேதி அன்று இண்டிகோ விமானத்தில் சென்னையிலிருந்து திருச்சிக்கு சென்ற போது விமானத்தின் அவசர கால கதவை பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா திறந்ததாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.   இது குறித்து விளக்கம் அளிக்க தேஜஸ்வி சூர்யாவுக்கு விமான போக்குவரத்து துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

 தேஜஸ்வி சூர்யாவுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் அந்த விமானத்தில் பயணித்ததாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் அண்ணாமலையை தொடர்ந்து விமர்சித்து வரும் முன்னாள் பாஜக நிர்வாகியும் நடிகையுமான காயத்ரி ரகுராம்,    நேபாள விமான விபத்துக்குப் பிறகு இண்டிகோ விமான நிறுவனங்கள் கருணை காட்டாமல் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். அவர் மேலும்,   யார் செய்த சேட்டை ? எங்க ________ செய்த சேட்டை என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். 

a

மேலும்,   நினைவிருக்கிறதா? இது தேசிய குற்றம். பயணிகளை ஆபத்தில் ஆழ்த்தியதற்காக அவர்கள் சட்டபூர்வமாக கைது செய்திருக்க வேண்டும்.  ஆனால் செல்வாக்கு அவர்களை காப்பாற்றியது என்கிறார்.

தொடர்ந்து இந்த விவாகரம் குறித்து காயத்ரி ரகுராம்,   பறக்கத் தயாரான பயணிகள் விமானத்தை பெரும் ஆபத்தில் தள்ளிய காரியத்தை சாதாரண குடிமகன் ஈடுபட்டால் அவர்கள் கைது செய்யப்பட்டு 2 வருடம் வரை சிறை சட்டப்படி தண்டனை உண்டு.   கர்நாடக வளர்ப்பு மகன் சென்னை -திருச்சி விமானத்தில் சென்றதால் 100 பயணிகள் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளார். மன்னிப்பு கடிதம் கொடுத்துவிட்டார் என்பது எப்படிச் சரி? சட்டப்படி 1 மன்னிப்பு கடிதத்தை வாங்க நிறுவனத்திற்கு உரிமை இல்லை. நிகழ்வு அடிப்படையில் புகார் கொடுத்து உரிய நபரை மாநில காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். வளர்ப்பு மகன் விளையாட்டு வேடிக்கை பார்ப்பது வாரிசு அரசியலின் அலங்கோல முகம் என்று அண்ணாமலையை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அண்ணாமலையின் தலைமையில் பெண்களுக்குத்தான் பாதுகாப்பு இல்லை என்று நினைத்தேன்.. இனி பயணிகளுக்கு கூட பாதுகாப்பில்லை போலிருக்கிறது. எச்சரிக்கை காரியகர்த்தாக்கள் என்கிறார்.