அண்ணாமலை வாட்ச் ஏன் விவாதப் பொருளாகிறது? திமுக விளக்கம்

 
ர


 தான் ஒரு தேசபக்தன் என்றும் தன்னால் ரபேல் விமானத்தை தான் ஓட்ட முடியாது என்றும்,  அதன் உதிரி பாகங்களை வைத்து உருவாக்கப்பட்ட வாட்ச்சையாவது ரபேல் வாட்சையாவது அணிந்திருக்கிறேன் என்று பெருமையாக கோவையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

உடனே அமைச்சர் செந்தில் பாலாஜி,  பிரான்ஸ் நிறுவத்திற்காக, உலகில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட, 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள  Rafale watchஐ, வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் கட்டியிருக்கிறார். அவர் வாங்கின ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட்டால் எளியவர்களும் வாங்கி மகிழலாம் என்றார்.

ந்

வெளிநாட்டு வாட்சை கட்டியிருக்கும் தேசியவியாதி, மன்னிக்க தேசியவாதி, ஆடு வளர்த்து சேர்த்து 5 லட்ச ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி? 
வார்ரூம் வழியாக தொழிலதிபர்களை மிரட்டினால் இப்படியெல்லாம் பணம் கிடைக்குமா?கடிகாரம் வாங்கிய ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட முடியுமா? இல்லை வழக்கம்போல excel sheet ஏமாத்து வேலை தான் வருமா?என்றும் கேட்டிருந்தார்.

இதற்கு அண்ணாமலை, விரைவில் தனது சொத்துக்கணக்கை வெளியிடுவதாக சொல்லி இருந்தார்.

அதற்கு செந்தில்பாலாஜி,  சம்பளக் கணக்கை வெளியிடுகிறேன், சாம்பார் கணக்கை வெளியிடுகிறேன் என கம்பி கட்டும் கதைகளை மக்களிடம் சொல்ல வேண்டாம். இவை அனைத்து ‘பல்பு’ வாங்கிய அரவக்குறிச்சி தேர்தல் மனுவிலேயே இருக்கிறது. இவர் என்ன வெளியிடுவது? யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும்.வேலியில் போகிற ஓணானை வேட்டிக்குள் விட்டுக் கொண்டது போல ரபேல் ஊழலை மீண்டும் மக்களிடம் நினைவூட்டி கதறும் முட்டாள்களிடம் கேட்பது எளிய கேள்விதான்.  பல லட்சம் மதிப்பு கொண்ட வெளிநாட்டு கடிகாரம் கட்டுவதுதான் தேசபக்தியா? இதுதான் நீங்கள் அளந்துவிடும் Made in India வா? என்று கேட்டிருந்தார்.

செ

அதன் பின்னரும் விரைவில் வெளியிடப்படும் என்று அண்ணாமலை சொன்னதால்,   பில் இருக்கிறதா? இல்லையா என்று ஒரே ஒரு கேள்விதான் கேட்கிறோம். ஆம்/இல்லை என்பதுதானே பதிலாக இருக்க முடியும்? ஏப்ரலில் பட்டியல் வரும்…மே மாதம் வெய்யில் அடிக்கும் என்று எல்லாம் அளப்பதைப் பார்த்தால் ‘அன்னைக்கு காலையில் 6 மணி இருக்கும்…கோழி கொக்கரக்கோன்னு…’ என்பது போலவே இருக்கிறது கலாய்த்தார்.

இந்நிலையில் அண்ணாமலையின் வாட்ச் இந்த அளவுக்கு ஏன் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது என்பது குறித்து விளக்கம் அளித்திருக்கிறார் திமுக மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி.

’’ராகுல் காந்தியின் டி-சர்ட்டை வைத்து அரசியல் செய்த பாஜக-வினர் போல், வாட்ச்சை வைத்து இழிவான அரசியல் செய்யும் நோக்கம் திமுக-வினருக்கு இல்லை.ஏன் இது விவாதப் பொருளாகிறது என்றால் மேடைக்கு மேடை,`சாதாரண எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன்’ ஆடு மேய்த்தவன் என்று புனிதம் பேசி, எளிமையானவன் என்று விளம்பரம் செய்யும்போதுதான் நீங்கள் அப்படி இருக்கிறீர்களா என்று கேள்வி வருகிறது.எந்த திமுக அமைச்சரும் கொள்கை அடிப்படையில்தான் பிரசாரம் செய்துவருகிறாரே தவிர நூறு ரூபாய்க்குச் செருப்பு போட்டோம் என்று பிரசாரம் செய்வதில்லை’’என்கிறார்.

 கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார் ராகுல் காந்தி.  இந்த நடைபயணத்தின் போது அவர் அணிந்திருக்கும் டீ சர்ட் பர்பரி என்கிற நிறுவனத்தின் டீ சர்ட் அதன் விலை 41,257 ரூபாய் என்று பாஜகவினர் வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.