அமைச்சர் முருகன் ஏன் இவ்விவகாரத்தில் அமைதியாக இருக்கிறார்? எழுத்தாளரின் கேள்வி

 
ம்m

யூடியூபர் ஒருவர் சிதம்பரம் நடராஜரை இழிவுபடுத்தும் விதமாக பேசி இருக்கும் நிலையில் ஆதீனங்கள் வாய் திறக்காதது ஏன் என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார் எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன்.

 சிதம்பரம் நடராஜரை கொச்சைப்படுத்தி வெளியிட்டிருக்கும் வீடியோவுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழக பாஜக வினர் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  ஆனால் ,  தமிழக அதீனங்களும், தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறையும் ஏன் அமைதி காக்கின்றன? என்று கேட்கிறார்.

பு

அவர் மேலும்,  தமிழகத்தில் மதநல்லிணக்கம் நிலவவேண்டும்.  அமைதி நிலவ வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.  பாஜக சார்பில் நெற்றியில் விபூதியும் கழுத்தில் காவியமாக அண்ணாமலை நோன்பு துறப்பில் கலந்துகொண்டார்.  இதேபோல் குல்லாவும் இஸ்லாமியர் அடையாளங்களுடன் இஸ்லாமிய பெருமக்கள் பங்கு பெறுமாறு பொது விருந்தில் பங்குபெற அண்ணாமலை அழைக்கப்படுகிறார்.  அதுவும் நடக்கும்.  இப்படிப்பட்ட மதநல்லிணக்கத்தை பாஜக முன்னெடுத்துச் செல்வது நல்ல விஷயம் என்று சொல்லும் ராஜன்,

 ஆனால் , தமிழக அரசு என்ன செய்கின்றது?  ஒரு பக்கம் இப்தார் நோன்புக்கு எல்லா உதவிகளையும் செய்கின்றது.  திமுக கட்சி சார்பில் இப்தார் நோன்பு துறப்புகள் நடக்கின்றது.  அதேநேரம் இந்துக்கள் மனம் புண்படும்படி ஒரு கூட்டம் பகுத்தறிவு என கையில் சிக்கும் பொழுது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லவா? ஒரு கண்டனம் தெரிவிக்க வேண்டும் அல்லவா? அதை செய்யவில்லை என்பதுதான் ஏன் என்று தெரியவில்லை.

 இந்து அறநிலையத்துறை என்பது இந்து கோவில் சொத்துகளை நிர்வாகம் செய்ய அதிகாரம் கொண்டது. அதில் சந்தேகமில்லை.  ஆனால் இம்மாதிரி இந்துக்கள் மனதை கொச்சைப்படுத்தும் கொடுமைகளை அவர்கள் கண்டிக்க வேண்டும் அல்லவா?  என்ற கேள்வி எழுப்பியிருக்கிறார்.

ன

 சிதம்பரம் நடராஜர் கோவில் அறநிலையத்துறை இல்லை என்பதற்காக எல்லா கோவில் சிவனையும் கொச்சைப் படுத்துவதை எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என்று கேட்கிறார்.

 இந்துக்கள் காணிக்கை வேண்டும், இந்து ஆலயங்கள் வருமானம் வேண்டும் . ஆனால் இந்த தெய்வங்களை கொச்சைப் படுத்தினால் அமைதி காப்போம் என்று அறநிலையத்துறை நினைக்குமானால் அது சரியான விஷயமாக இருக்க முடியாது. அறநிலையத்துறைக்கும் அறம் வேண்டும் என்கிறார்.

 இந்த விவகாரத்தில் மாநில அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் யூடியூப் நிறுவனத்தை கட்டுப்படுத்தும் இடத்தில் இருக்கும்  மத்திய என்ன செய்கிறது என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது.  அந்த துறைக்கு பாஜக எல். முருகன்தான் இணை அமைச்சராக இருக்கிறார்.  அவர் ஏன் இந்த விவகாரத்தில் அமைதியாகவே இருக்கிறார் என்பதுதான் புரியவில்லை என்ற கேட்கிறார்.

 இவ்வளவு பெரும் கொடுமை நடக்கும் பொழுது தமிழக ஆதீனங்கள்  வாய் திறக்காது.  சஷ்டி கவச கொச்சைப்படுத்திய போதும் வாய்திறக்கவில்லை.  இப்பொழுது இந்த நடராஜப் பெருமானையும் அவமானப்படுத்தும் போதும் வாயே திறக்கவில்லை.  ஏனென்றால் அவர்கள்தான் ஆதினம்.  அதாவது அந்தப் பெயரில் இருக்கும் திராவிட அபிமானிகள் அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என்கிறார் ஸ்டான்லி ராஜன்.