ஓபிஎஸ் அதற்கு பதில் சொல்லாமல் போனது ஏன்?

 
oo

 நீதிமன்ற உத்தரவுப்படி அதிமுக பொதுக்குழு நடக்காததால் ஆத்திரமடைந்த  ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொது பொதுக்குழுவை புறக்கணித்து வெளியேறினர்.    வரைவு செய்யப்பட்ட இருபத்தி மூன்று தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும்.  அது குறித்து மட்டுமே ஆலோசிக்க வேண்டும்.  தனித் தீர்மானம் எதுவும் கொண்டு வரக்கூடாது.  புதிய முடிவுகள் எதுவும் எடுக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில்,  அந்த உத்தரவை காற்றில்  பறக்கவிட்டது நேற்றைய அதிமுக பொதுக்குழு. 

 இருபத்தி மூன்று தீர்மானங்களையும் நிராகரிக்கிறோம் என்று அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 2190 பேர் கையெழுத்திட்டு எழுதப்பட்ட கடிதத்தை வாசித்தார் சிவி சண்முகம்.   தானும் 23 தீர்மானங்களையும் நிராகரிக்கிறேன் என்று சொன்னார்.   கேபி முனுசாமி இருபத்தி மூன்று தீர்மானங்களையும் இந்தப் பொதுக்குழு நிராகரிக்கிறது என்றார்.  

ஓஓ

 புதிய முடிவுகள் எடுக்கக்கூடாது என்ற உத்தரவு இருந்த நிலையில்,   அடுத்த பொதுக்குழு கூட்டத்தை அவசரமாக அறிவித்தார்கள்.  அதுவும் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனைவிட்டு அந்த அறிவிப்பை செய்தார்கள்.  அந்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை கொண்டு வந்து எடப்பாடி பழனிச்சாமியை  பொதுச்செயலாளர் ஆக்குவோம் என்று கர்ஜித்தார்கள்.

 முன்னாள் அமைச்சர்கள் எஸ். பி வேலுமணி,  ஜெயக்குமார்,  சி.வி சண்முகம்,  வளர்மதி உள்ளிட்டோர் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும்.  பொதுச்செயலாளர் ஆக வேண்டும் எடப்பாடி பழனிச்சாமி என்று கர்ஜித்தார்கள்.   நீதிமன்றத்தின் உத்தரவுகளை கொஞ்சம் கூட மதிக்காமல் தொடர்ந்து புதிய முடிவுகளை சீனியர்கல் எடுத்துவர,  மேடைக்கு கீழிருந்த பொதுக்குழு உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட , ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த ஓபிஎஸ்சும்அவரது ஆதரவாளர்களும் பொதுக்குழுவில் இருந்து வெளிநடப்பு செய்து விட்டனர்.  அதன் பின்னர் எடப்பாடியின் ஆதரவாளர்கள் அடுத்த பொதுக்குழுவில் அண்ணன் எடப்பாடி பொதுச் செயலாளர் ஆகிறார் என்று உறுதியாகச் சொல்கிறார்கள்.

 இந்த பரபரப்பான சூழலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும்,  தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சிடிரவியும் எடப்பாடியையும் ஓபிஎஸ்சையும் தனித்தனியாக சந்தித்து பேசினர்.   இதனால் இருவரையும் பாஜக சமாதானப்படுத்துகிறதா என்ற பேச்சு எழுந்தது . அதற்கு ஜெயக்குமார்,  அதிமுக விஷயத்தில் பாஜக தலையிட முடியாது என்று  தெரிவித்திருந்தார்.

ப்ப்ப்ப்

 இந்த நிலையில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் அவரது இல்லத்தில் நேற்று இரவு ஆலோசனை நடத்தினார்.   அதன்பின்னர் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.  அவருடன் அவரது மகன் ரவீந்திரநாத் , ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம்,  ஜேசிடி பிரபாகர்,  மனோஜ் பாண்டியன் மற்றும்   வழக்கறிஞர்களும் சென்றனர்.  இதனால் ஓபிஎஸ் டீம் டெல்லிக்கு சென்று தேர்தல் ஆணையத்திடம் முறையிடப் போகிறது என்ற பேச்சு எழுந்தது.   பொதுக்குழுவில் சட்ட விதிகளை பின்பற்றவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போகிறார்கள் என்ற பேச்சும் எழுந்தது.  

 அண்ணாமலையும் சிடி ரவியும் சந்தித்துவிட்டு போயிருந்ததால் டெல்லி மேலிடம் ஓபிஎஸ்-ஐ அழைத்து பேசப் போகிறது என்ற பேச்சும் எழுந்தது . ஆனால் டெல்லி செல்வதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஸ் இடம் எதற்கு இந்த டெல்லி பயணம் என்று கேட்ட போது,  ‘ குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்.  அதற்காக பாஜக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.  அந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக டெல்லி செல்கிறேன்’ என்றார் . அது உண்மைதான் என்று நம்பும்படியாக எடப்பாடி பழனிச்சாமியின் சார்பிலும் தம்பிதுரை டெல்லி செல்வதாக தகவல் பரவியது . 

அடுத்து செய்தியாளர்கள்,   அதிமுகவின் மோதல் குறித்து டெல்லி தலைமை இடம் விவாதிப்பீர்களா என்று ஓபிஎஸ் இடம் கேட்க,  அதற்கு அவர் பதில் எதுவும் சொல்லாமல் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.   ஓபிஎஸ் அதற்கு ஏன் பதில் சொல்லாமல் புறப்பட்டு சென்றார் என்ற சலசலப்பு எழுந்திருக்கிறது அதிமுகவில்.