’’உங்க சாதி சண்டையில எங்களை ஏன் இழுக்குறீங்க? ’’- கடுப்பான பாஜக
சாதி சங்க தலைவராக விரும்புகிறார ஓபிஎஸ்? என்று அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான கே.சி.பழனிச்சாமி எழுப்பியுள்ள கேள்விக்கு, சின்னம்மா ஜாதி பார்த்திருந்தால் எடப்பாடி எப்படி முதல்வர் ஆகி இருப்பார்? என்று கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள். உங்க சாதி சண்டையில எங்களை ஏன் இழுக்குறீங்க? என்றும் பாஜக கேள்வி எழுப்பி இருக்கிறது.
எடப்பாடி ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு அதுதான் அதிமுக என்கிறார். ஓபிஎஸ் ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு அதிதான் அதிமுக என்கிறார். இந்த பிரச்சனை அடுத்த கட்டம் சாதி பிரச்சனையாக உருவெடுக்கிறது. அதிமுகவை கவுண்டர் கட்சியாக மாற்றிவிடுவார் எடப்பாடி என்று ஓபிஎஸ் தரப்பினர் குற்றம் சாட்டி வரும் நிலையில், ஓபிஎஸ்சை விட்டால் தேவர் கட்சியாக மாற்றிவிடுவார் என்று எடப்பாடி தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுகவை எடப்பாடி இடம் இருந்து முழுவதுமாக மீட்டெடுக்க வேண்டும். அதற்கு ஓபிஎஸ் -சசிகலா இணைய வேண்டும் என்று அவர்கள் சார்ந்த சமூகம் முன் வந்திருக்கிறது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட தேவர் சமூக அமைப்புகள் ஓபிஎஸ் பின்னாலும், சசிகலா பின்னாலும் அணி திரண்டு இருக்கிறார்கள். ஓ. பன்னீர்செல்வம் , சசிகலாவும் இணைந்து அதிமுகவை மீட்க வேண்டும் என்று 50க்கும் மேற்பட்ட தேவர் சமுதாய அமைப்புகள் ஓபிஎஸ்க்கும் சசிகலாவுக்கும் ரகசிய கடிதம் எழுதி இருக்கிறார்கள்.
இதனால், ‘’அதிமுக தலைவராக விரும்புகிறாரா அல்லது சாதி சங்க தலைவராக விரும்புகிறாரா ஓபிஎஸ்? எற்கனவே தமிழகத்தை இரண்டு மாநிலமாக பிரிக்கவேண்டும் என்ற பாஜகவின் எண்ணத்திற்கு அதிமுகவின் சாதிய பிளவு வழிவகுக்கும். எம்.ஜி.ஆர்.& அம்மா வழியில் சாதிக்கும் மதத்திற்கும் அப்பாற்பட்ட அதிமுக உருவாக்கப்பட வேண்டும்’’என்கிறா கே.சி.பழனிச்சாமி.
அதற்கு, ‘’சின்னம்மா ஜாதி பார்த்திருந்தால் எடப்பாடி எப்படி முதல்வர் ஆகி இருப்பார் ?’’ என்று கேட்கிறார்கள் சசிகலா ஆதரவாளர்கள். ‘’ஏம்பா, கவுண்டர் கட்சி ஆக அதிமுகவை ஆக்கிய எடப்பாடி பழனிச்சாமி சரியா? ஓஹோ, நீயும் G.யா? இதை சொல்லறது யாரு? கவுண்டர் அதிமுக பிரிவில் இருந்து வரும் நண்பர் சொல்றாரு? அப்ப கவுண்டர் கட்சியா இருந்தா பரவாயில்லையா?’’ என்று கேட்கிறார்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.
அதே நேரம் பாஜக ஆதரவாளரோ, ‘’அதிமுக பல ஆண்டுகளாக கவுண்டர் மற்றும் முக்குலத்தோர் Backingஅரசியல் தான் செய்கிறது. இது ஊர் அறிந்த உண்மை. இதில் எல்லாம் பாஜக எங்கே இருந்து வருகிறது?’’ என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.
அதிமுக தலைவராக விரும்புகிறார அல்லது சாதி சங்க தலைவராக விரும்புகிறார #OPS ? எற்கனவே தமிழகத்தை இரண்டு மாநிலமாக பிரிக்கவேண்டும் என்ற பாஜகவின் என்னத்திற்கு அதிமுகவின் சாதிய பிளவு வழிவகுக்கும். #MGR & அம்மா வழியில் சாதிக்கும் மதத்திற்கும் அப்பாற்பட்ட அதிமுக உருவாக்கப்பட வேண்டும். pic.twitter.com/yP6SPhIAI3
— K C Palanisamy (@KCPalanisamy1) July 30, 2022