"ஆம் அண்ணா தான் இந்நாட்டை ஆளுகிறார்" - "தமிழன்" ராகுலின் பேச்சு ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?

 
பேரறிஞர் அண்ணா

நேற்றிலிருந்து சமூக வலைதளங்களை ஆக்கிரமித்திருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. பட்ஜெட் கூட்டத்தொடர் விவாதத்தின் முதல் நாளே அவர் பேசியது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் பாஜகவுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது. அவர் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். அதில் அவர் சொன்ன ஒரு வார்த்தை தான் பயங்கர டிரெண்டானது. அதாவது "பாஜக தன் வாழ்நாளில் ஒருபோதும் தமிழ்நாட்டு மக்களை ஆளவே முடியாது. இந்தியா தமிழ்நாட்டிடம் கற்றுக்கொள்ள வேண்டும்" என்றார். 

அதேபோல நிருபர் அவரிடம், "ஏன் அடிக்கடி தமிழ்நாட்டை உச்சரிக்கிறீர்கள்" என கேட்டதற்கு, "நானே தமிழன் தானே" என அசால்டாக சொல்லிவிட்டு நகர்ந்தார். அவர் கொளுத்திப்போட்ட சரவெடி பட்டாசு குமரியில் ஆரம்பித்து காஷ்மீர் வரை வெடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இதில் நாம் பேசாத ஒரு விஷயமும் அவர் பேச்சின் சாரம்சத்தில் அடங்கியுள்ளது. அதுதான் மாநில சுயாட்சி. ஒரு காலக்கட்டத்தில் மாநில உரிமைகளைக் காலில் போட்டு நசுக்கி கொண்டிருந்த ஒரு தேசிய கட்சியின் தலைவர், மாநில சுயாட்சி குறித்து பேசியிருப்பது இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

"மாநிலங்களிடம் ஆலோசனை மேற்கொள்ளாமல் மத்திய அரசு ஒருபோதும் ஆட்சி செய்ய முடியாது. நம் அரசியலமைப்பு சாசனத்திலேயே மாநிலங்களின் கூட்டமைப்பு தான் இந்திய ஒன்றியம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மாநிலங்களுடன் ஆலோசித்து பிரச்சினைகளைச் சரிசெய்வதே ஒன்றிய அரசின் பணியை தவிர இந்தியாவை ராஜ்ஜியம் என நினைக்க கூடாது. நீங்கள் அதன் மன்னர்களும் இல்லை. இதனை எப்போதும் மறந்துவிடாதீர்கள்” என்றார். இது அப்பட்டமாக தோலுரித்து காட்டுவது மாநில சுயாட்சி தான். இன்று அவர் பேசியதை விட 50 ஆண்டுகளுக்கு முன்னர் வீரியமாக ஒருவர் பேசினார்.

The Hug and the Wink: How Rahul Gandhi created history in Lok Sabha during  no-trust vote debate

அப்போதைய ஒன்றிய அரசான காங்கிரஸை எதிர்த்து பேசினார். இன்று அதே காங்கிரஸ் கட்சி மாநில சுயாட்சி குறித்து பேசியிருக்கிறது. அந்த ஒருவர் பேரறிஞர் அண்ணா. இதற்கெல்லாம்  விதை போட்டவர் பேரறிஞர் அண்ணா தாப். அண்ணாவின் 53ஆவது நினைவுநாளில் ராகுல் காந்தி அவரின் உயிர்மூச்சான கொள்கை குறித்து நாடாளுமன்றத்தில் பேசியிருப்பது இன்னும் ஸ்பெஷலாக அமைந்துள்ளது. ராகுல் காந்தியின் பேச்சு, "அண்ணா தான் இந்த தமிழ்நாட்டை ஆளுகிறான்” என்பதற்கு சாட்சியாக அமைந்துள்ளது. ஆம் இந்த சமயத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேரறிஞர் அண்ணா பேசிய ஒரு உரையை நினைவுப்படுத்த வேண்டியுள்ளது. 

Karunanidhi Post Photos | Karunanidhi: காலத்தில் கலந்த கருணாநிதியின்  கிளாசிக் காலங்கள்!

1968ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு பெயர் சூட்டும் விழாவில் உரையாறிய அண்ணா, "தாய்த்திருநாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் வைத்திருக்கிறோம்.
சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட வடிவம் கொடுத்திருக்கிறோம். இருமொழிக் கொள்கை - தமிழ் - ஆங்கிலம் மட்டும்தான். தமிழ்நாட்டில் மும்மொழிக்கு இடமில்லை. இந்த மூன்றும் மிக முக்கியமானது. எங்கள் ஆட்சியையே மாற்றவேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள் என்று எனக்குச் செய்தி வந்தது. அவர்களால் முடியுமா? என்று நான் சவால் விடமாட்டேன்.

நான் திராவிட நாட்டிலிருந்து வந்திருக்கிறேன்; இந்தியப் பாராளுமன்றத்தில்  அண்ணா - Madras Review

இன்றைய அரசியல் அமைப்புச் சட்டப்படி, அவர்கள் நினைத்தால் முடியும். ஆனால், அப்படியே வேறு யார் வந்து உட்கார்ந்தாலும், நாங்கள் செய்த இந்த முப்பெரும் சாதனைகளை மாற்றலாம் என்று நினைத்தாலோ, அந்த நேரத்தில் அதை மாற்றினாலோ, மக்கள் நிலை என்னாகும்? தமிழ்நாடு எப்படிப்பட்ட சூழ்நிலையை உருவாக்கும் என்று நினைக்கின்ற நேரத்தில், அவர்களை அறியாமல் ஒரு அச்சம் தோன்றும், அந்த அச்சம் இருக்கின்றவரையில், அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆளுகிறான் என்று பொருள்” என பேசினார். ஆகவே தான் ராகுல் காந்தியின் "தமிழ்நாட்டை பாஜகவால் ஆள முடியாது" என்ற பேச்சு இந்த தருணத்தில் முக்கியவத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.