ஓபிஎஸ்சை ஏன் இன்னும் கைது செய்யவில்லை - அன்பழகன் ஆவேசம்

 
அன்

ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரை போலீசார் ஏன் இதுவரைக்கும் கைது செய்யவில்லை.  இதன் மூலமே திமுகவின் சதிச்செயல் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது என்கிறார் புதுச்சேரி மாநிலத்தின் கிழக்கு மாநிலச் செயலாளர் அன்பழகன்.

 புதுச்சேரியில் அதிமுக தலைமை அலுவலகத்தில்  கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.   அப்போது, அதிமுக அலுவலகத்தில் நடந்த மோதல் விவகாரம் குறித்து பேசினார்.

ov

 எங்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் திமுகவின் துணையோடு தான் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தனது அடியாட்களுடன் உள்ளே நுழைந்தார்.   அலுவலகத்தை அடித்து உடைத்து அங்கிருந்த சொத்து பத்திரங்கள் மற்றும் விலை மதிப்பில்லாத பொருட்களை திருடிச் சென்றார்கள் இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நடந்த விசாரணையில் திருடப்பட்ட 112 பொருட்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்  சிபிசிஐடி போலீசார்.

 ஆனால், திருட்டு புகாருக்கு ஆளான ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம் மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட யாரையும் போலீசார் இதுவரைக்கும் கைது செய்யவில்லை.  இதன் மூலமாகவே திமுகவின் சதி செயல் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது என்றார். 

 மேலும்,  கழகத்தை அழிக்க நினைக்கின்ற யாராக இருந்தாலும் அவர்கள் அரசியல் அரங்கில் இருந்து காணாமல் போய்விடுவார்கள் . கழகத்தில் இருந்து கொண்டே துரோகம் செய்யும் துரோகிகளை எடப்பாடியார் துவேஷம் செய்வார் என்று எச்சரித்தார்.