திமுக ஏன் இப்படி செய்தது? நான் வருத்தப்படுகிறேன் - காயத்ரி ரகுராம்

 
க்ய்

மத்திய அரசால் வாரணாசியில் நடத்தப்பட்டு வந்தது காசி தமிழ் சங்கமம்.   நவம்பர் 17ஆம் தேதி முதல் டிசம்பர் 16ஆம் தேதி இன்று வரை  வாரணாசியில் இந்திய கல்வி அமைச்சகம் நடத்திய இந்த ஒரு மாத நிகழ்வு  நவம்பர் 19ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது.

v

காசி தமிழ் சங்கமத்தில் கருத்தரங்குகள், கலாச்சார பாரம்பரிய நிகழ்வுகள் என்று பல்வேறு நிகழ்வுகள் திட்டமிடப்பட்டு நடந்தது.  காசி தமிழ் சங்கமத்திற்கு சென்னை ஐஐடியும் வாரணாசியில் உள்ள இந்து பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தின.  


அறிவு சார்ந்த இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டில் இருந்து பலரும் சென்றனர்.  ஆனால் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் சார்பில் யாரும் பங்கேற்கவில்லை .  வாரணாசி நிகழ்வுக்கு தமிழ்நாடு அரசின் பங்கேற்பையும் உதவியையும் கூறி எழுதினோம்.  ஆனால் அவர்களிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை என்று கல்வித் துறை அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. 

kk

 காசி தமிழ்ச் சங்க நிகழ்ச்சிக்கான கடிதத்தை தனது கையெழுத்திட்டு அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதலமைச்சர். ஸ்டாலினுக்கு எழுதியிருக்கிறார் ஆனால் அதன் பிறகு தமிழக அரசிடம் இருந்து எந்த பதிலும் இல்லை என்று கூறப்படுகிறது.  தமிழ் தொடர்பாக இவ்வளவு பெரிய நிகழ்ச்சி நடக்கும்போது இதில் தமிழ்நாடு அரசு பங்கேற்காதது , குறித்து ஒரு சலசலப்பு  இருந்து கொண்டே இருக்கிறது.  

vaa

இந்த நிலையில் நடிகையும் நடன இயக்குனரும் பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம்,  தமிழ் மொழி, தமிழ் ஆன்மிகம், தமிழ் கலாச்சாரம், தமிழ் கலை மற்றும் கலைஞர்கள், தமிழ் விளையாட்டுகளை காசியுடன் இணைத்து கௌரவித்ததற்கு நன்றி. மிக நீண்ட காலத்தில் நடந்த சிறந்த விஷயம். நன்றி.

இதில் பங்கேற்ற அனைத்து அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர்கள், ஆட்சியர்களுக்கு மற்றும் தலைவர்கள் நன்றி. திமுக அரசு அக்கறை காட்ட தவறியது ஏன்? ஆன்மீகம் காரணமா? அல்லது வடக்கோடு இணைக்க விரும்பவில்லையா? அல்லது பரவலான தமிழ் கலாச்சாரத்தின் வளர்ச்சி பிடிக்கவில்லையா?காசி தமிழ் சங்கமம் முதல் அனுபவத்தை தவறவிட்டேன். நான் இன்னும் வருத்தமாக உணர்கிறேன். எனது அணிக்காகவும் நான் வருத்தப்படுகிறேன் என்று பதிவிட்டிருக்கிறார்.