திமுக, காங்கிரசுக்கு ஏன் அழைப்பில்லை? கம்யூனிஸ்டுகளுடன் விசிக அவசர ஆலோசனை

 
c

விடுதலை சிறுத்தைகள் , மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் , மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட், லிபரேசன் கட்சிகள் இன்று அவசர ஆலோசனை நடத்தியுள்ளன.  சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடந்துள்ளது.  

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு , சமையல் எரிவாயு  விலையேற்றத்தை கண்டித்து தேசிய அளவில் பிரச்சார இயக்கம் நடத்தப்படுகின்றது. இதில், தமிழ்நாட்டில் இணைந்து செயல்படுவோம் என்று ஆலோசித்துள்ளனர்.

c

மே25ம் தேதி முதல் 31ம் தேதி வரைக்கும் பிரச்சார இயக்கத்தை நடத்துவது என்று ஆலோசனையில் முடிவெடுத்துள்ளனர்.  மேலும்,   மே26 மற்றும் 27 தேதிகளில் ஒன்றிய, நகர, வட்ட அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவெடுத்துள்ளனர்.  

வரும் 25ம் தேதி முதல் 31ம் தேதி வரையிலும் வீடு வீடாக சென்று  மத்திய அரசுக்கு எதிரான கண்டன துண்டு பிரசுரங்கள் விநியோகிக்க வேண்டும் என்றும் முடிவெடுத்துள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அறிக்கையாக தயார் செய்து அதில், கே.பாலகிருஷ்ணன், இரா. முத்தரசன்., திருமாவளவன், என்.கே.நடராஜன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

கூட்டணியில் இருக்கும் திமுக , காங்கிரசை விடுத்து கம்யூனிஸ்டுகளுடன் விசிக ஆலோசனை நடத்தியிருப்பது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திமுக, காங்கிரசுக்கு ஏன் அழைப்பில்லை? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.