கொடநாடு பங்களாவுக்கு யாரெல்லாம் வருவார்கள்? - ஜெ., உதவியாளரிடம் 9 மணி நேர விசாரணை

 
pஓ

 ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் 9 மணி நேரம் விசாரணை நடந்திருக்கிறது. கொடநாடு பங்களாவுக்கு யாரெல்லாம் வந்து செல்ல வருவார்கள் என்ற கேள்வி விசாரணையில் கேட்கப்பட்டிருக்கிறது .

கொடநாடு கொலை, கொலை வழக்கில் மறு விசாரணை நடந்து வருகிறது.   இந்த வழக்கில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இந்த மறு விசாரணை நடந்து வருகிறது. இதுவரைக்கும் 220 நபர்களிடம் விசாரணை நடந்திருக்கிறது. 

கொ

 கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடந்து வரும் இந்த விசாரணையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் 3-வது நாளாக நேற்று விசாரணை நடந்திருக்கிறது.   ஒன்பது மணி நேரம்  மூன்றாவது நாள் விசாரணை நடந்திருக்கிறது .

ஏப்ரல் 29,  30 ஆகிய தேதிகளில் பூங்குன்றனிடம் 18 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது.  இந்த நிலையில்தான் மூன்றாவது நாளாக நேற்று  9  மணி நேரம் விசாரணை நடந்திருக்கிறது.    காலை பத்து முப்பது மணி அளவில் விசாரணை அலுவலகத்தில் ஆஜராகி இருக்கிறார் பூங்குன்றன்.

ஓ

தனிப்படை போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.    கொடநாடு பங்களாவுக்கு யாரெல்லாம் வருவார்கள் அங்கு என்னென்ன ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்தன என்பது குறித்தெல்லாம் பூங்குன்றனிடம் விசாரணை நடந்திருக்கிறது.   கொடநாடு வழக்கு தொடர்பாக கைதானவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பரிசுப் பொருட்களை காட்டி இவை கொடநாடு பங்களாவில் இருந்ததா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது .   காலை பத்து முப்பது மணி முதல் இரவு 8 மணி வரை ஒன்பது அரை மணி நேரம் இந்த விசாரணை நீடித்திருக்கிறது.