கட்சியை யார் வழி நடத்த வேண்டும்? கட்சியின் தலைவராக யார் வர வேண்டும்?- ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு

 
m

 கட்சியை யார் வழி நடத்த வேண்டும்? கட்சியின் தலைவராக யார் வர வேண்டும்? என்பது குறித்து பேசி பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்.

 எம்ஜிஆரின் 106 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவர் வாழ்ந்து மறைந்த ராமாவரம் தோட்டத்தில் எம்ஜிஆர் குறித்து நூல் எழுதிய எழுத்தாளர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.  முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்,  முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன்,  முன்னாள் அமைச்சர்கள் வைத்தியலிங்கம்,  வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். 

m

 அந்த நிகழ்ச்சியில் ஓபிஎஸ் பேசும்போது,  எந்த அளவிற்கு தமிழக மக்களை எம்.ஜி.ஆர் நேசித்தாரோ அதே அளவுக்கு இயக்கத்தின் தொண்டர்களையும் நேசித்தார்.  எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கட்சிக்காக உழைக்கும் தொண்டர்களுக்காக மதிப்பும் மரியாதையும் தந்தார்.  

 உலக அரசியல் வரலாற்றிலேயே அரசியல் கட்சியின் வரலாற்றில் இல்லாத வகையில் தன் இயக்கத்தின் தொண்டர்களுக்கு கௌரவம் தந்தவர்  புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்றார்.

 தொடர்ந்து பேசிய ஓபிஎஸ்,   கட்சியை யார் வழி நடத்த வேண்டும் கட்சியின் தலைவராக யார் வர வேண்டும் என்றும்,  அவரை தேர்ந்தெடுக்கும் தார்மீக உரிமையை தொண்டர்களுக்கு தந்தார் தூய தலைவர் எம்ஜிஆர்.   

 அதிமுகவின் தலைமை பொறுப்புக்கு ஒருவர் வரவேண்டும் என்றால்,  அதிமுகவின் அடிப்படையை தொண்டர்கள் அனைவரும் வாக்களித்து தான் அவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற விதியை நம் இயக்கத்திற்கு உரிமையாக்கியவர் எம்ஜிஆர்.  அதனால் கழகத்தின் எந்த விதியை வேண்டுமானாலும் மாற்றலாமே தவிர கழகத்தின் தலைமை பொறுப்புக்கு உரியவரை அடிப்படை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் அந்த சட்ட விதிகளை மாற்றவே முடியாது என்கிற நிலைத்த விதியை கொண்ட இயக்கம் அதிமுக என்று குறிப்பிட்டு பேசினார்.

 எடப்பாடி பழனிச்சாமி  அணியினருக்கு பதிலடி தரும் விதமாகவே ஓபிஎஸ்ன் பேச்சு  இருந்தது.