’’எடப்பாடி புறம்போக்கு; ஓபிஎஸ் உள்பட யார் யாரை எல்லாம் தோற்கடிக்க பணம் கொடுத்தார்? எவ்வளவு கொடுத்தார்?’’ஆதாரம் காட்டும் கோவை செல்வராஜ்

 
ko

அதிமுகவின் சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு ஓபிஎஸ் தான் காரணம் என்று எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில்  கூட்டத்தில் பேசியிருக்கும் நிலையில் அதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார் கோவை செல்வராஜ்.  ஓபிஎஸ் வைத்திலிங்கம் போன்றோர் தேர்தலில் ஜெயிக்க கூடாது என்பதற்காக எடப்பாடி யார் யாருக்கெல்லாம் பணம் கொடுத்தார் என்ற ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன.  இன்னும் அதிமுகவில் யார் யாரெல்லாம் ஜெயிக்க கூடாது . யார் யாருக்கு எதிராக வேலை செய்தார்?  அவருக்கு உதவியவர்கள் யார்? எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது? என்றும், அவர் எதிர்க்கட்சியினருக்கு பணம் கொடுத்தார் என்ற ஆதாரங்கள் இருக்கின்றன என்று சொல்லி பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார்.

 அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய போது தேர்தல்,  தோல்விக்கு பன்னீர் தான் காரணம் என்று சொன்னார்.  இதற்கு பதிலடி கொடுப்பதற்காக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். 

ee

 அப்போது அவர்,   ’’அதிமுகவில் பல்வேறு குழுக்களை அமைத்து ஆட்சி மன்ற குழுவில் கலந்து ஆலோசிக்கப்பட்டு சட்டமன்ற தேர்தல் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது தான் வழக்கம்.  ஆனால் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓபிஎஸ் உடன் எந்தவித ஆலோசனையும் இபிஎஸ் மேற்கொள்ளவில்லை.  தங்கமணி, வேலுமணி என்ற இரண்டு மணிகளை வைத்துக்கொண்டு தொகுதி பங்கீடு கூட்டணி ஒதுக்கீடு போன்றவற்றில் முடிவெடுத்தார் இபிஎஸ்.   வேட்பாளர் தேர்விலும் தன்னிச்சையாக முடிவெடுத்து அறிவித்தார்.  இதைப் பற்றி எல்லாம் ஓபிஎஸ் வெளிப்படையாக பேசியிருந்தால் கட்சி அன்றைக்கு இரண்டாக பிளவு பட்டிருக்கும் .  ஆனால் தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் அம்மா ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என்பதற்காக ஓபிஎஸ் அமைதியாக இருந்து விட்டார்’’ என்று தெரிவித்துள்ளார்.

 அவர் மேலும்,   ’’இன்றும் கூட தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று தெரிவித்திருக்கிறோம் .  இபிஎஸ் தரப்பில் கொடுக்கப்பட்ட உறுப்பினர்கள் நீக்கம்  அறிக்கையை தேர்தல் ஆணையம் புறக்கணித்து விட்டது . எடப்பாடி இன்று பட்டா இல்லாத புறம்போக்கு நிலம் போல இருக்கிறார்.  ஓபிஎஸ்க்குத் தான் எல்லா அறிக்கைகளையும் கடிதங்களையும் தேர்தல் ஆணையம் அனுப்புகிறது. 

 ஓபிஎஸ் தரப்பில் புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்த அறிக்கை திங்கட்கிழமை வெளியிடப்பட்டு தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பணம் செய்யப்படும்’’என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும்,  ’’ தேர்தலில் அதிமுக தோற்பதற்கு எடப்பாடி துரோகம் தான் முக்கிய காரணம்.   தேர்தலில் ஓபிஎஸ், வைத்திலிங்கம்  வெற்றி பெறக் கூடாது என்பதற்காக மாற்றுக் கட்சி வேட்பாளர்களுக்கு பணம் கொடுத்து எடப்பாடி சதி வேலை செய்தார்.  அதற்கான ஆதாரங்கள் உள்ளன.  அவர் இல்லை என்று சொல்வாரா? அவர்கள் மட்டும் இல்லை என்று சொல்லட்டும்.   தேர்தலில் அவர் யார் யாருக்கு எதிராக வேலை செய்தார்?  அவருக்கு உதவியவர்கள் யார்? எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது? என்ற பட்டியலை எல்லாம் வெளியிடுவேன்.  இதனை சொல்லக்கூடாது என்று இத்தனை நாளும் இருந்தேன்.  ஆனால் ஓபிஎஸ் தான் தேர்தல் தோல்விக்கு காரணம் என்று சொல்லி இப்போது சொல்ல வைத்து விட்டார்’’ என்று கூறியிருக்கிறார்.