யார் இந்த திரௌபதி முர்மு? இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத்தலைவர்?

 
d

 பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.   திரௌபதி முர்மு இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் இந்தியாவின் முதல் பழங்குடியினர் பெண் குடியரசுத்தலைவர் என்ற சிறப்பை பெறுவார்.  

குடியரசுத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனேயே திரௌபதி முர்முக்கு  இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட  இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.  

dr

திரௌபதி முர்மு 20.6.1958 ஆம் ஆண்டில் ஒடிசா மாநிலத்தில் மயூர்பஞ்ச் மாவட்டத்திலுள்ள பாடிபோசி கிராமத்தில் பிறந்தவர்.   இவர் சந்தால் என்கிற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்.   தந்தை பிராஞ்சி நாராயண் டுடு.  ஆசிரியராகத் தனது பணியைத் தொடங்கிய திரௌபதி முர்மு,  1997ஆம் ஆண்டில் ராய் நகர் பூர் பஞ்சாயத்து உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பின்னர் போக்குவரத்து துறை, வணிகம், மீன்வளம் , கால்நடை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமைச்சராக  இருந்தவர்,  2015 -2021 காலகட்டங்களில்  ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்தார்.

dddd

ஒடிசாவில் பாஜக மற்றும் பிஜு ஜனதா தள கூட்டணி அரசாங்கத்தின் போது, இவர் மார்ச் 6, 2000 முதல் ஆகஸ்ட் 6, 2002 வரை வர்த்தக மற்றும் போக்குவரத்துக்கான சுயாதீன பொறுப்பையும், மீன்வள மற்றும் விலங்கு வள மேம்பாட்டையும் ஆகஸ்ட் 6, 2002 முதல் மே 16, 2004 வரை மாநில அமைச்சராக இருந்தார்.  முன்னாள் ஒடிசா அமைச்சராகவும், 2000 மற்றும் 2004ஆம் ஆண்டுகளில் ரைரங்க்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.


ஜார்கண்டின் முதல் பெண் ஆளுநர் ஆனார்.   ஒடிசாவிலிருந்து  ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் பெண் மற்றும் பழங்குடித் தலைவர் திரௌபதி முர்மு. சியாம் சரண் முர்முவை திருமணம் செய்து கொண்ட திரௌபதி முர்முக்கு  இரண்டு மகன்களும் ஒரு மகள்.  கணவர் மற்றும் இரண்டு மகன்களின் இழப்பு  திரௌபதி முர்முவின் வாழ்க்கையில் தனிப்பட்ட துயரங்கள்.

mmmm

குடியரசுத்தலைவராக திரௌபதி முர்மு  போட்டியிடுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி,  ‘’திரௌபதி முர்மு ஜி  ஒரு சிறந்த ஆளுநராக பதவி வகித்தவர். நம் நாட்டின் சிறந்த குடியரசுத் தலைவராக இருப்பார் என்றும் நான் நம்புகிறேன்.  மில்லியன் கணக்கான மக்கள், குறிப்பாக வறுமையை அனுபவித்தவர்கள் மற்றும் கஷ்டங்களை எதிர்கொண்டவர்கள், திரௌபதியின் வாழ்க்கையிலிருந்து பெரும் வலிமையைப் பெறுகிறார்கள்.   தனது வாழ்க்கையை சமுதாயத்திற்கு சேவை செய்வதற்கும், ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காகவும் அர்ப்பணித்துள்ளார் திரௌபதி முர்மு ஜி . அவரின் கொள்கை விஷயங்களைப் பற்றிய புரிதலும் இரக்க குணமும் நம் நாட்டிற்கு பெரிதும் பயனளிக்கும் என்று நம்புகிறேன்’’ என்று தெரிவித்திருக்கிறார்.