ஓபிஎஸ் நாற்காலி யாருக்கு? நத்தமா? மணியனா?

 
ஓ

ஓ. பன்னீர்செல்வத்தின் ஒருங்கிணைப்பாளர் நாற்காலியை ஒடித்து தூர போட்டு விட்டனர் எடப்பாடி தரப்பினர்.   அடுத்ததாக ஓபிஎஸ் இன் பொருளாளர் நற்காலியில் திண்டுக்கல் சீனிவாசனை அமர வைத்து விட்டனர் .  ஏற்கனவே பொருளாளராக இருந்த அனுபவம் இருக்கிறது திண்டுக்கல் சீனிவாசனுக்கு.  அந்த முறையில் அவரை அமர வைத்து விட்டார் எடப்பாடி .  

இந்த நிலையில் மிச்சம் இருக்கும் ஓபிஎஸ் நாற்காலி.  எதிர்க்கட்சித் துணைத் தலைவர் நாற்காலி தான்.   அந்த நாற்காலியை விட்டும் ஓபிஎஸ்ஐ எழுப்பி விட்டு அதில் தனது ஆதரவாளரை உட்கார வைத்து விட வேண்டும் என்று கடும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் எடப்பாடி.   இதற்காக ஓ. பன்னீர் செல்வத்தை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அதிமுகவின் எம்எல்ஏக்கள் தீர்மானம் கொண்டு வந்து,  அதில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கையெழுத்து விட்டு அந்த தீர்மானத்தை சபாநாயகர் அப்பாவுக்கு அனுப்பி வைக்க முடிவெடுத்துள்ளார் எடப்பாடி.

ப்ப்ப்

 ஓபிஎஸ்சை  எதிர்க்கட்சித் துணைத் தலைவர்  நற்காலியில் இருந்து ஓபிஎஸ் எழுப்பி விட்ட பின்னர் அதில் யாரை உட்கார வைக்கலாம் என்று எடப்பாடி பழனிச்சாமி ஒரு பட்டியல் போட்டு வைத்திருக்கிறார்.   அந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் நத்தம் விஸ்வநாதன்.   பொதுக்குழுவில்  வளர்மதி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட பலரும் ஓபிஎஸ்ச்சை  கடுமையாக விமர்சித்தாலும் கூட நத்தம் விஸ்வநாதன் விலாசம் வித்தியாசமானது என்கிறார்கள் .அது எடப்பாடிக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது என்றார்கள் .

அந்த வகையில் இந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் நாற்காலியில் அவரை உட்கார வைக்கலாம் என்று ஒரு பட்டியல் போட்டு அதில் முதல் இடத்தில் நத்தம் விஸ்வநாதன் பெயரை எழுதி இருக்கிறாராம் எடப்பாடி.  அடுத்ததாக ஓஎஸ் மணியன் பெயர் இருக்கிறதாம்.   பொதுக்குழுவில் புரட்சித் தலைவர் , புரட்சித்தலைவி வரிசையில் புரட்சித்தலைமகன் என்று எடப்பாடிக்கு பட்டம் கொடுத்தது ரொம்பவே நெகிழ வைத்திருக்கிறது எடப்பாடியை .  அதனால் அவருக்கு பட்டியலில் இரண்டாவது இடம் கொடுத்து இருக்கிறார்.   இதற்கு அடுத்து மூன்றாவது இடத்தில் இருப்பவர் திண்டுக்கல் சீனிவாசன்.   ஏற்கனவே ஓபிஎஸ் இன் பொருளாளர் நாற்காலியில் அவர் உட்கார்ந்து இருப்பதால் அவருக்கு இந்த நாற்காலியும் கிடைக்க வாய்ப்பு குறைவு தான் என்கிறார்கள்.

 நத்தம் விஸ்வநாதன் அல்லது ஓஎஸ் மணி இருவரில் ஒருவருக்கு கிடைக்க எதிர்க்கட்சி துணைத் தலைவர் நாற்காலி கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்கிறது அதிமுக வட்டாரம்.