அந்த கருப்பு ஆடு யார்? பதவி பறிபோனதால் கடுப்பான காயத்ரி ரகுராம்

 
g

தமிழக பாஜகவில் காயத்ரி ரகுராம் பதவி பறிபோயிருக்கிறது.   இதனால் காயத்ரிரகுராமை பலரும் வறுத்தெடுத்து வருகின்றனர்.   அதே நேரம்,   மாநில பதவி பறிபோனால் என்ன தேசிய அளவில் பதவி வரும் என்று ஆறுதலும் பலர் சொல்லி வருகின்றனர்.

காயத்ரியின் பதவி பறி போகிறது என்பதை ஒரு மாதத்திற்கு முன்பே  சொல்லி இருந்தார் சவுக்கு சங்கர்.   கட்சி விவகாரம் உங்களுக்கு எப்படி தெரிகிறது?  உங்களுக்கு சொல்லும் அந்த கருப்பு ஆடு யார்? தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன் என்று அவரிடம் கேட்டிருக்கிறார்.

gy

 தமிழக பாஜகவின் புதிய மாநில நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டிருக்கிறார்.   இந்த பட்டியலில் தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவராக  பதவி வகித்து வந்த காயத்ரி ரகுராமுக்கு  பதிலாக அந்த பதவி பெப்சி சிவக்குமாருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இது காயத்ரி ரகுராமுக்கும் அவர் ஆதரவாளர்களுக்கும் மிகுந்த அதிர்ச்சி அளித்திருக்கிறது.

 தனது பதவி பறிபோனதை அடுத்து ,இரண்டு தேர்தல்களுக்கும் கலை மற்றும் பண்பாட்டு குழுவினர் கடுமையாக உழைத்தனர்.  எனது கடின உழைப்பை மக்கள் பார்த்தது மகிழ்ச்சி அடைந்தார்கள்.  உண்மையாகவே பாஜக உறுப்பினராகவும் பூத் ஏஜெண்டாகவும் என் பணியை தொடர்வேன்.  கடவுள் என்னோடு இருக்கிறார்.  நான் எந்த பதவி எதிர்பார்ப்புடன் இங்கு வரவில்லை.   அதனால் நான் ஏமாற்றப்படவில்லை.   பதவி என்பது என்னை பொருத்தவரைக்கும் விசிட்டிங் கார்டு  அல்ல.  எனது ஆன்மீக பயணமும் அரசியல் பயணமும் இப்போதுதான் தொடங்கி இருப்பதாக உணர்கிறேன்.  இது  வெறும் ஆரம்பம் என்று தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி இருக்கிறார்.

gyy

அவர் மேலும்,  எனது ஒரே தலைவர் பிதாமகன் மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி ஜி என்றும்  காயத்ரி ரகுராம் குறிப்பிட்டிருப்பதால்,  அண்ணாமலை மீதும் தமிழக பாஜகவின் பிற நிர்வாகிகள் மீதும் அவர் கடுப்பில் இருக்கிறார் என்பது தெரிகிறது  என்கிறார்கள்.  

காயத்ரி பதவி பறிக்கப்பட போகிறது.  அவரது பதவி வேறு ஒருவருக்கு மாற்றப்பட போகிறது என்பதை ஒரு மாதத்திற்கு முன்பே  புலனாய்வு செய்து சொல்லி இருக்கிறார் சவுக்கு சங்கர்.   இதனால் ஒரு மாதத்திற்கு முன்பு எப்படி சொன்னீர்கள்?  பாஜக கட்சிக்குள் என்ன நடக்கிறது என்பதை உங்களுக்கு எப்படி தெரியும்? உங்களுக்கு சொல்லும் அந்த கருப்பு ஆடு யார்? அதை  தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன் என்று கேட்கிறார் காயத்ரி ரகுராம்.