எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை யாருக்கு? எடப்பாடி டீம் எடுத்திருக்கும் முடிவு

 
eo

தமிழக சட்டசபை இன்று கூடவிருக்கும் நிலையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை யாருக்கு என்ற பரபரப்பும் எழுந்திருக்கிறது . ஒரு வேளை ஓபிஎஸ்க்கு அந்த இருக்கை ஒதுக்கப்பட்டால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள்  கூட்டத்தை புறக்கணிக்க திட்டமிட்டு  இருக்கிறார்கள் என்று தகவல்.

 தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.   இந்த அதே நேரம் இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை யாருக்கு என்ற கேள்வி எழுந்திருக்கிறது .  

u

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சி  தலைவர் ஆகவும்,  ஓ. பன்னீர்செல்வம் எதிர்க்கட்சி துணைத் தலைவராகவும் இருந்து வந்தனர் . ஒற்றை தலைமை விவகாரத்தால் அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்தது. இரு அணியாக பிரிந்து நிற்கின்றனர்.   இதன்பின்னர் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி,   ஆர்.பி. உதயகுமாரை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக நியமனம் செய்திருக்கிறார். அவருக்கு தான் சட்டசபை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார். 

 இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இப்போது அது குறித்து எதுவும் முடிவு எடுக்கக் கூடாது என்று ஓபிஎஸ்  கடிதம் மூலம் சபாநாயகர் அப்பாவுக்கு வலியுறுத்தி இருக்கிறார். 

 இந்த விவகாரத்தில் அப்பாவு சபாநாயகர் அப்பாவு என்ன முடிவெடுத்த போகிறார் என்பது இன்றைக்கு தெரிந்துவிடும் .  ஒருவேளை ஓபிஎஸ்க்கு சாதகமான முடிவு எடுக்கப்பட்டால் அவருக்கே மீண்டும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை ஒதுக்கப்பட்டால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை புறக்கணிக்க திட்டமிட்டு உள்ளார்கள் என்று தகவல்.