25 எம்.எல்.ஏ.க்கள் யார்யார் என்பது கோவையில் மேடையேற்றும்போது தெரியும்? கோவை செல்வராஜ்

 
se

 அந்த 25 எம்எல்ஏக்கள் யார் யார் என்று விரைவில் தெரியவரும். அவர்கள் எங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள் . பன்னீர்செல்வம் தலைமையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அவர்கள் மேடையில் அமர்த்தப்படுவார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறார்  ஓபிஎஸ் ஆதரவாளர்  கோவை செல்வராஜ்.  

 ஓபிஎஸ் அணியின் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களிட  பேசினபோது,   பழனிச்சாமியை மக்களிடம் அறிமுகப்படுத்தியது பன்னீர்செல்வம் தான்.  அவரை அவமானப்படுத்தும் நோக்கில் பேசுவதை பழனிச்சாமி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார்.  

oo

 எடப்பாடி பழனிச்சாமிக்கு பணம் பதவி இரண்டும் தான் தேவை.  ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இருக்கும் வரை எந்த கொம்பனாலும் கட்சியை தொடக்கூட முடியாது . துரோகம் செய்து பழக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி விரைவு காணாமல் போய்விடுவார்.

 ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் உடன் எம் எல் ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் இணைந்து செயலாற்ற தயாராக இருக்கின்றார்கள்.  ஓபிஎஸ் சொன்னதை  சசிகலாவும் தினகரனும் ஏற்று ஒற்றுமையாக செயல்படுவோம் என்று சொல்லி இருக்கிறார்கள்.   கட்சிக்காக தினகரனுடன் இணைந்து செயல்படுவோம்.   தனிப்பட்ட நபர்களுக்காக அதிமுக இயங்காது.

தொண்டர்களின் கருத்து வேறு.  கொடி,  சின்னம்தான் அவர்களுக்கு முக்கியம்.  கோவை மாநகர மாவட்டத்தில்  செப்டம்பர் மாதத்தில் தான் தொண்டர்கள் பங்கேற்கின்ற வகையில் பிரம்மாண்ட செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட இருக்கிறது. இந்த கூட்டத்தில் யாரெல்லாம் நடையில் என்பது தெரிய வரும் அதே 25 எம்எல்ஏக்களுக்கு எங்களுடன் பேசி வருகிறார்கள். அந்த மேடையில் அமர்த்தப்படுவார்கள் அப்போது அந்த 25 எம்எல்ஏக்கள் யார் யார் என்பது தெரியவரும் என்று சஸ்பென்ஸ் வைக்கிறார் கோவை செல்வராஜ்.