நள்ளிரவில் கைதான அதிமுக நிர்வாகி மகன் எங்கே? - மாஜி அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆவேசம்

 
v

கண்டன பொதுக் கூட்டத்தை நடத்த விடாமல் தடுப்பதற்காக அதிமுகவினர் மீது பொய் வழக்குகள் போட்டு கைது செய்யப்படுகிறார்கள்.  கைது செய்தவர்கள் யார்? கைது செய்யப்பட்டவர் எங்கே இருக்கிறார் என்று தகவல் கூட தெரியவில்லை என்று புகார் அளித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர்.

 கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எம். ஆர். விஜயபாஸ்கர்,  இது குறித்து இன்று புகார் மனுவை அளித்துள்ளார் . அதன் பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார் .

vi

அப்போது,   முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த  கண்டன பொதுக்கூட்டம் கரூரில் நடைபெறாமல் தடுக்கும் நோக்கத்தோடு அதிமுகவினர் மீது தொடர்ந்து பொய் வழக்குகள் பதிவு செய்து வருகிறார்கள்.   சில தினங்களுக்கு முன்பு கரூரில் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலின் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்து உள்ளார்கள்.

 திமுகவினர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்யவில்லை.  நேற்று நள்ளிரவில் அதிமுக நிர்வாகி ஒருவரின் மகன் போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார்.  கைது செய்த போலீசார் எந்த காவல் நிலையத்தை சேர்ந்தவர்கள் என்கிற விவரம் தெரியவில்லை.  கைது செய்யப்பட்டவர் எந்த காவல் நிலையத்தில் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார் என்கிற தகவலும் தெரியவில்லை.

 இதனால் தான் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருக்கிறோம் என்று சொன்னவர்,   அதிமுக மாவட்ட அவைத்தலைவர் திரு.வி. க.வை கடத்திய நபர்கள் மீது இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை . இதை வன்மையாக கண்டிக்கிறோம்.   தொடர்ந்து இப்படி கரூர் மாவட்டத்தில் நடந்தால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று ஆவேசத்துடன் கூறினார்.