இரவில் எங்கே சென்றார் அண்ணாமலை? தேடிய உளவுத்துறை

 
a

நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்த அண்ணாமலை திடீரென்று யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து புறப்பட்டு கோசாலையில் சென்று இரவில் தங்கி இருக்கிறார். திடீரென்று அதற்கான அவர் எங்கே சென்றார் என்று உளவுத்துறை குழம்பிப் போய் தேடி இருக்கிறது.   மறுநாள் தான் அவர் கோசாலையில் தங்கி இருந்த விவரம் தெரியவந்திருக்கிறது. 

 இரண்டு நாள் பயணமாக தென் மாவட்டங்களுக்கு சென்று இருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை .  கடந்த 12ஆம் தேதி அன்று கன்னியாகுமரியில் விவேகானந்தர் கேந்திர மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார்.   அதன் பின்னர் இரவில் திருநெல்வேலி மாவட்ட பாஜக தலைவர் தயா சங்கர் நடத்தும் கேம்பிரிட்ஜ் பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகள் உடனும் பெற்றோர் உடனும் சந்தித்து உரையாடி இருக்கிறார் .

nn

கட்சியினரை யாரும் வர வேண்டாம் என்றும் , வரவேற்பு தர வேண்டாம் என்று முன்கூட்டியே சொல்லி இருக்கிறார் அண்ணாமலை.  இதை அடுத்து மறுநாள் 13 ஆம் தேதி கன்னியாகுமரி அருமனையில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்பதற்காக செல்ல இருந்திருக்கிறார்.  இதற்காக திருநெல்வேலி உள்ள நட்சத்திர ஓட்டலில் இரவில் தங்குவதாக கூறப்பட்டிருக்கிறது. 

நிகழ்ச்சி முடிந்ததும் அவர் திடீரென்று மாயமாகி விட்டதால் ஒரு தரப்பினர் கன்னியாகுமரி சென்று விட்டார் என்று கூறியிருக்கிறார்கள்.  ஆனால் அவர் இரவு எங்கே சென்றார் இரவில் எங்கே தங்கினார் என்று உளவுத்துறைக்கும் தெரியாமல் இருந்திருக்கிறது.   அவர்களும் குழம்பிப்போய் தேடியிருக்கிறார்கள்.  பின்னர் தான் திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் வல்லநாடு அருகே கால்நடைகள் பராமரிக்கும் கோசாலை ஒன்றில் ஒரு சிறிய அறையில் அண்ணாமலை தங்கி இருந்திருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது.

 எந்த வசதியும் இல்லாத எளிய கட்டிடத்தில் அவர் இருந்திருக்கிறார்.   பகலில் தான் திருநெல்வேலி மாவட்ட பாஜக அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்திக்க நேரம் ஒதுக்கியிருந்திருக்கிறார் . கோசாலையில் தங்கி இருந்த அண்ணாமலை பொங்கல் சிறப்பு பூஜையில் பங்கேற்று பசுக்களுக்கு பழங்கள் வழங்கியுள்ளார். தொடர்ந்து நடந்த சிறப்பு பூஜைகளிலும் அவர் கலந்த கொண்டிருக்கிறார் .

இது குறித்து அண்ணாமலை இடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப,   நான் எளிமையை விரும்புபவன்.  அதனால்தான் அங்கு சென்று தங்கி இருந்தேன்.
அதனால்தான் இரவில் கோசாலையில் சென்று தங்கி இருந்தேன் என்று கூறி இருக்கும் அண்ணாமலை,   இதற்கு முன்னரே அந்த கோசாலைக்கு சென்று இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.