அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் எப்போது?

 
j

 அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் எப்போது என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,  முன்னாள் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளருமான ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

 இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் தேர்தலை நடத்தி பொதுச்செயலாளர் ஆவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கிறார் என்று தகவல் பரவி வருகிறது. 

e

  கடந்த ஜூலை 11ஆம் தேதி அன்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இதை எதிர்த்து ஓபிஎஸ் பல்வேறு வழக்குகளை தொடுத்து வந்தாலும் அதை எதிர்த்து போராடி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.  ஆனாலும் இந்த வழக்குகளில் எல்லாம் தான் வெற்றி பெற்று விடுவோம் என்ற முழு நம்பிக்கையில் இருக்கிறார் எடப்பாடி.

 அது மட்டுமல்லாமல் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தலை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என்பதால் அந்த வாய்ப்பை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டு இருக்கிறார் எடப்பாடி .

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம்,   அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் எப்போது என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,    கட்சிப் பணிகள் தொடர்ந்து தொய்வில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது.  அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் விரைவில் நடைபெறும்.  அது குறித்த அறிவிப்பு முறையாக தெரிவிக்கப்படும் என்று கூறினார்.