ஓபிஎஸ்க்கு என்ன பதில் சொல்லப்போகிறார் பிரதமர் மோடி?

 
மொ

அதிமுக பிரச்சனை குறித்து பேசுவதற்காக சென்னை வரும் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேச அனுமதி கேட்டு இருக்கிறார் ஓபிஎஸ்.  என்ன பதில் சொல்லப் போகிறார் மோடி என்கிற எதிர்பார்ப்பு அதிமுக வட்டாரத்தில் அதிகம் இருக்கிறது.

 செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை துவக்கி வைப்பதற்காக வரும் 28ஆம் தேதி அன்று பிரதமர் மோடி சென்னை வருகிறார்.   பிரதமரின் சென்னை பயணத்தின் போது அவரை நேரில் சந்தித்து பேச ஓபிஎஸ் அனுமதி கேட்டு இருக்கிறார். 

எப்

உட்கட்சி தேர்தல்  வழியாக 5 ஆண்டுகளுக்கு ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் தன்னை திடீரென்று எடப்பாடி தரப்பினர் நீக்கியது செல்லாது.  கட்சியையும் இரட்டை இலை சின்னத்தையும் நாங்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு வழங்கியிருக்கிறார். இதேபோல் பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக தான் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும்,  பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து கட்சியில் இருந்து நீக்கியிருக்கிறோம் என்றும்,  இரட்டை இலை சின்னத்தை தன் தரப்பு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமியும் தேர்தல் ஆணையத்திடம் மனு வழங்கியிருக்கிறார்.

 இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்திக் கொள்ள தேர்தல் ஆணையம் வழங்கும் உத்தரவை பொறுத்துதான் பாஜக மேலிடத்தின் நிலைப்பாடு தெரிய வரும் என்கிறார்கள் அதிமுகவினர்.

ஏஏ

 இந்த நிலையில் ,   சாதி ரீதியாக அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் பிளவு படுத்தி விட்டனர்  அதிமுகவில் கொடுக்க இருக்கும் நெருக்கடி குறித்தும் பிரதமரிடம் முடிவு முறையிட பன்னீர்செல்வம் முடிவு செய்து இருக்கிறார் .  இதற்காக வரும் 28ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அதிமுகவின் பிரச்சினைகள் குறித்து பேச முடிவெடுத்து இருக்கிறார் .   ஓபிஎஸ்க்கு அனுமதி தருவாரா என்ற சலசலப்பு எழுந்திருக்கிறது அதிமுக வட்டாரத்தில்.