எஸ்.வி.சேகருக்கு பாஜகவில் என்ன பொறுப்பு?

 
sv

நடிகரும் ,  முன்னாள் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.வி. சேகர் நேற்று பாஜக தமிழக பாஜகவின் தலைமையகம் கமலாலயத்திற்கு சென்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து  பேசியிருக்கிறார் .

முன்னாள் சென்சார் போர்டு உறுப்பினராக இருந்த எஸ். வி. சேகர் உடன் படங்களுக்கான தணிக்கை , சென்சார் போர்டு விவகாரம் குறித்து நீண்ட நேரம் ஆலோசித்திருக்கிறார் அண்ணாமலை.   சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த எஸ் .வி சேகர். மீண்டும் அண்ணாமலையை சந்திப்பதன் மூலம் அவர் மீண்டும் தீவிர அரசியலில்  ஈடுபட போகிறார். பாஜகவில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட இருக்கிறது என்ற பேச்சிருக்கிறது.

sv

 அதிமுகவில் இணைந்து 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.  பின்னர் அதிமுகவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததால் 2009 ஆம் ஆண்டில் கட்சி விரோத நடவடிக்கை குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டு அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். 2010 ஆம் ஆண்டில் ராகுல் காந்தியை சந்தித்து விட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டார்.   அதன் பின்னர் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரை புகழ்ந்து திமுகவுக்கு செல்வதாக இருந்தார்.   ஆனால் அது நடக்காததால் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக  பாஜக பக்கம்  போய் விட்டார்.   அப்போது பொன்.ராதாகிருஷ்ணன் தமிழக பாஜக தலைவராக இருந்தார்.

 தமிழக பிரச்சாரக் குழு தலைவராக பதவி அளிக்கப்படும் என்று எனக்கு பாஜகவில் இணைந்த போது வாக்குறுதி அளிக்கப்பட்டது . பொன்.ராதாகிருஷ்ணன் கடிதமும் கொடுத்தார்.  ஆனால் அப்படி ஒரு பதவி அளிக்கப்படவில்லை.  பாஜகவின் எந்த ஒரு கூட்டத்துக்கும் எனக்கு தகவல் வருவதில்லை . மோடி பிரச்சாரத்துக்கு வந்த போது கூட எனக்கு தகவல் அளிக்கப்படவில்லை.  வேண்டியவர்களுக்கு பதவி கொடுக்க வேண்டும் என்று தான் தமிழக பாஜக தலைவர் யோசிக்கிறார்கள்.  

ss

யார் கட்சியை தேசிய அளவுக்கு வளர்த்தெடுப்பார்?  யார் தேசிய பிரச்சனை மட்டுமல்லாது மாநில பிரச்சனைகளையும் சரியாக கையாளுவார் என்று யோசித்து அவர்களுக்கு பதவி வழங்கப்படுவதில்லை.   திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் தான் வட இந்திய கட்சி என்கிற மாயையை மாற்றி பாஜகவை தென்னிந்தியாவிலும் வளர்க்க முடியும் என்று புலம்பி வந்தார்.  இந்த இந்த நிலையில் அவர் அண்ணாமலை சந்தித்து பேசி இருப்பதன் மூலம் அவருக்கு பாஜகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட இருக்கிறது என்று தெரிகிறது. அது தொடர்பாகத்தான் அவரை கமலாலயம் அழைத்து பேசியிருக்கிறார் அண்ணாமலை என்று தகவல்.