என்ன சொல்லப் போகிறார் ஓபிஎஸ்?

 
o

 பரபரப்பான அரசியல் சூழலில் நாளை காலை 8 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.

 அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பான விசாரணையில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வராமல் இருக்கிறது.   இதற்கிடையில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டிருக்கும் நிலையில் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? அப்படி கிடைத்தால் அந்த அதிமுகவின் எந்த அணிக்கு கிடைக்கும் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.

oo

 இதற்காக தேர்தல் தலைமை ஆணையரை சந்தித்து இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று இபிஎஸ் அணியும், ஓபிஎஸ் அணியும் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் பரவுகிறது.

இந்த நிலையில்,   ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமாகா ஒதுங்கிக் கொண்டு அதிமுகவுக்கு  ஆதரவு கொடுத்து இருக்கிறது.   இதில் அதிமுக களமிறங்க முடிவு எடுத்திருக்கிறது.   அதேநேரம் பாஜகவும் போட்டியிட முயன்று வருகிறது.   இந்த இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணியும் களம் இறங்க முடிவு செய்து இருப்பதாக தகவல்.

  ஓபிஎஸ் அணி சார்பில் போட்டியிட முடிவெடுத்தால் யாரை வேட்பாளராக அறிவிக்க இருக்கிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இபிஎஸ் அணியும் பாஜகவும் இணைந்து வேட்பாளரை நிறுத்துகிறதா? இல்லை அதிமுகவும் பாஜகவும் தனித்தனியாக போட்டியிடப்போகிறதா ? என்று பரபரப்பு இருக்கிறது.

  இந்த பரபரப்பான சூழலில் நாளை காலையில் எட்டு மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ஓபிஎஸ் நான் தமிழக அரசியலில் பரபரப்பு கூடியிருக்கிறது.