ஓபிஎஸ் -இபிஎஸ் விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு என்ன? யாருக்கு ஆதரவு?

 
oo

அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிட முடியாது.   அதே நேரம் அதிமுக விவகாரத்தில் பாஜக நடுநிலையோடு இருக்கும்.  மேற்கொண்டு தலைமை முடிவு செய்யும் என்று தெரிவித்திருக்கிறார் நயினார் நாகேந்திரன்.

na

 பாஜக நெல்லை தொகுதி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் ராமையன் பட்டியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.   அப்போது , அதிமுகவில் இப்படி சண்டை ஏற்படுவதால் தான் நான் அங்கிருந்து வெளியேறினேன்.   ஆனால் அதிமுகவினர் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.   ஓபிஎஸ் -இபிஎஸ் இருவரும் சேரவே முடியாது என்று சொல்ல முடியாது .  இதற்கு முன்னரே இதுபோன்று இருவரும் இணைந்த கைகளாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.  அதுதான் அதிமுகவின் வாழ்வுக்கு நன்றாகவும் இருக்கும் என்று தெரிவித்த அவர்,  

 மேலும்,  அதிமுக அலுவலகம் அருகே சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் நடக்காமல் திமுக பார்த்திருக்க வேண்டும்.  ஆனால் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கும் அளவிற்கு திமுக சென்றிருக்கக் கூடாது என்றும் சாடி இருக்கிறார் .

நான் பாஜகவில் சேரும் போது அதிமுகவில் உள்ளவர்களை என்னோடு யாரையும் அழைக்கவில்லை.   அப்படி அழைப்பு விடுத்திருந்தால் அநேகம் பேர் வந்திருப்பார்கள் என்கிறார்.