நீ மூடிகிட்டு இருந்தா தான் என்ன... காயத்ரி மீது சூர்யாசிவா ஆவேசம்

 
ச்ர்

கதவு என்றாலே ஏம்மா உனக்கு பிரச்சனையாக இருக்குது.  கொஞ்சம் உன் கதவை நீ மூடிக்கிட்டு இருந்தா தான் என்ன? என்று கேட்கிறார் திருச்சி சூர்யா சிவா

ஃப்

 இண்டிகோ விமானத்தில் கடந்த டிசம்பர் 10ஆம் தேதி அன்று சென்னையிலிருந்து திருச்சிக்கு சென்ற போது விமானத்தின் அவசர கால கதவை பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா திறந்ததாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.   இது குறித்து விளக்கம் அளிக்க தேஜஸ்வி சூர்யாவுக்கு விமான போக்குவரத்து துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.   தேஜஸ்வி சூர்யாவுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் அந்த விமானத்தில் பயணித்ததாக கூறப்படுகிறது.  தவறுதலாக கை நீட்டும்போது கதவு திறந்துகொண்டது என்று தேஜஸ்வி சூர்யாவும், அண்ணாமலையும் விளக்கம் அளித்திருப்பதாக தகவல்.

இதற்கு முன்னாள் பாஜக நிர்வாகியும் நடிகையுமான காயத்ரி ரகுராம்,   ’’தவறுதலாக கை நீட்டுவதன் மூலம் பூட்டை எவ்வாறு தொடும்?’’என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

காயத்ரியின் இந்த கேள்விக்கு திருச்சி சூர்யா சிவா,  ‘’கதவு நாளே உனக்கு ஏமா பிரச்சனையா இருக்குது? கண்ணாடி கதவு போட்டாலும் பிரச்சனை.  கதவை திறந்தாலும் பிரச்சனை.  கொஞ்சம் உன் கதவை நீ மூடிகிட்டு இருந்தா தான் என்ன. ஏதோ விமான போக்குவரத்து துறை அமைச்சர் என்று நினைப்பு’’என்று கடுமையாக சாடியிருக்கிறார்.

ட்

அண்ணாமலை மீது தொடர் தாக்குதல் நடத்தி வரும் காயத்ரி ரகுராம் மீது அண்ணாமலையின் ஆதரவாளர் திருச்சி சூர்யா சிவா கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.  இந்த நிலையில்தான்,  ஒரு பைத்தியம் அல்லது மன அழுத்தம் உள்ளவர் அல்லது ஆபத்தான பயங்கரவாதி மட்டுமே மற்ற பயணிகளின் உயிரை பணயம் வைத்து ஓடும் விமானத்தின் கதவைத் திறப்பார்.  மேலும் ஒரு பைத்தியம் அல்லது மன அழுத்தம் உள்ளவர் அல்லது ஆபத்தான பயங்கரவாதி மட்டுமே தவறான செயல்களை பார்த்துக் கொண்டு அடுத்த இருக்கையில் ஜாலியாக அமர்ந்திருப்பார்.  யார் பைத்தியக்காரன், யார் ஆபத்தானவன், மற்றும் யார் பயங்கரவாதி என்று தமிழக மக்களுக்குத் தெரியும் என்று அண்ணாமலையை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

இதனால்தான் சூர்யா சிவாவும் கடுமையாகவே பதிலடி கொடுத்திருக்கிறார்.