அந்த 4 கேள்விகள் என்னாச்சு? ஜட்ஜ்மென்ட் காப்பியில் ஒரு observation அல்லது remark இல்லையே ஏன்?

 
ஓப்ப்

அதிமுக  பொதுக்குழுவுக்கு தடை கேட்டு ஓபிஎஸ் வழக்கு தொடுத்தபோதே, உள்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று நீதிமன்றம் சொல்லி இருக்கலாம்.   உள்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று சொல்வதற்காவா இரண்டு நாட்கள் விசாரணை நடந்தது?  இரண்டு நாட்கள் விசாரணை நடத்திவிட்டு இரண்டு தரப்பிலும் அத்தனை கேள்விகள் கேட்டுவிட்டு கடைசியில் பொதுக்குழு நடத்தலாம் என்று சொன்னதால்தான் இத்தனை களேபரம் நடந்துவிட்டது.   ஒருவர் நீதிமன்றம் சென்றால் அவரின் பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டுமே தவிர,  நீதிமன்றமே வரக்கூடாது என்று சொல்லக்கூடாது என்று பலரும் விமர்சனம் சொல்லி வருகின்றனர்.  

க்

இரண்டு நாள் விசாரணையில் முதல் நாள் விசாரணையின்போது இபிஎஸ் தரபிடம் 4 கேள்விகளை கேட்டிருந்தார் நீதிபதி.  இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளின் தற்போதைய நிலை என்ன? பொதுக்குழுவை கூட்ட தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா?  எத்தனை நாட்களுக்கு முன் பொதுக்குழு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும் என்பது குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று எடப்பாடி தரப்புக்கு உத்தரவிட்டார். அதற்கு எடப்பாடி தரப்பினரும் விளக்கம் அவகாசம் வாங்கிக்கொண்டு பதில் அளித்தனர்.  கடைசியில்  அந்த கேள்விகளும் விளக்கமும் தீர்பில் இல்லை என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது.

’’ நீதியரசர்  நான்கு முக்கியமான கேள்விகளை எழுப்பினார். அந்த எந்த கேள்வியை பற்றியுமே ஜட்ஜ்மென்ட் காப்பியில் ஒரு observation அல்லது remark இல்லையே ஏன்?’’என்று கேட்கிறார் அதிமுகவின் முன்னாள் ஐடி விங் நிர்வாகி அஸ்பயர் சுவாமிநாதன்.

இன்றைய தீர்ப்பில் நீதிபதி,  பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளதால் பொதுக்குழுவை நடத்தலாம் என்று அனுமதி அளித்தார்.  இதில் உட்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது என்றும் விதிகளை மீறினால் நீதிமன்றத்தினைநாடலாம் என்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தீர்ப்பளித்தார். 

 அவர் தனது தீர்ப்பில் மேலும்,    கட்சி உறுப்பினர் நம்பிக்கையை பெற முடியாதவர்கள் நீதிமன்றங்களை ஒரு கருவியாக பயன்படுத்துகின்றனர்.  கட்சியினர் ஆதரவை பெற முடியாத மனுதாரர் நீதிமன்றங்கள் வாயிலாக தான் நினைப்பதை சாதிக்க பார்க்கிறார் .   ஜனநாயகத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பம் தான் மோலோங்கி இருக்கும்.   ஒருங்கிணைப்பாளர் என்பவர் கட்சியின் நலன் வளர்ச்சிக்கு ஏற்றவாறு உறுப்பினர்களை சமாதானம் செய்ய வேண்டும்.   பொதுக்குழுவில் தீர்வு கிடைக்காவிடில் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம்.   சிறந்த நிர்வாகத்திற்காக கட்சி விதிகளை வகுக்கும் விகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது என்று தனது  தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.