ஜெயலலிதா அன்று சொன்னது இன்று நடக்குது

 
ka

எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்த எழுச்சியை போல எடப்பாடி பழனிச்சாமி காலத்தில் எழுச்சி ஏற்பட்டிருக்கிறது.    முன்னாள் அதிமுக அமைச்சர் காமராஜ்  முன்னிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கூத்தாநல்லூரில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்.   அமைச்சர் காமராஜ் முன்னிலையில் அவர்கள் அதிமுகவில் இணைந்தனர்.

 இந்த கூட்டத்தில்  காமராஜ் பேசியபோது,  எடப்பாடி பழனிச்சாமியை எல்லோரும் ஏற்றுக் கொண்டு அதிமுக இன்றைக்கு எழுச்சிமிகு இயக்கமாக இருக்கிறது.  எம்ஜிஆர் காலத்தில் ஏற்பட்ட எழுச்சியை போல,  ஜெயலலிதா காலத்தில் ஏற்பட்ட எழுச்சியை போல தற்போது எடப்பாடி பழனிச்சாமி காலத்திலும் எழுச்சி ஏற்பட்டிருக்கிறது.

kk

 அதிமுகவில் யாரும் தன்னைத்தானே தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டதில்லை.  ஒட்டுமொத்த மக்களும் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர் எம்ஜிஆர்.  அதிமுகவில் தனக்குப் பிறகு வரப்போகும் தலைவர் யார் என்பதை மக்களும் தொண்டர்களும் தான் முடிவு செய்வார்கள் என்று ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.  அந்தக் கருத்து இன்றைக்கு அதிமுகவில் நடந்து கொண்டிருக்கிறது. 

 எடப்பாடி பழனிச்சாமி ஒட்டுமொத்த மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளும் போற்றப்படும் தலைவராக உருவாகி விட்டார்.  ஜெயலலிதா காவிரி உரிமையை மீட்டுத் தந்தது போல டெல்டா பகுதியில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி அவரை நாம் நன்றியோடு நினைத்துப் பார்க்கின்றேன் இந்த நிலை இந்த நிகழ்ச்சியை ஒட்டி பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் வைக்கப்பட்டிருந்த பேனர்களில் ஓபிஎஸ் படம் இடம்பெறவில்லை.