அமைச்சர் கொடுத்த பட்டம் - அசால்ட் செய்த அண்ணாமலை

 
அல்

 தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை  வாடா போடா என்று ஒருமையில் பேசி,  பொறுக்கி என்று கடுமையாக விமர்சித்து, அளவுக்கு அளவுக்கு மீறி ஆட்டம் போட்டால் வாலை ஒட்ட நறுக்கி சுண்ணாம்பு வைத்து விடுவோம் கடுமையாக எச்சரித்துள்ளார் அமைச்சர் தா. மோ.அன்பரசன்.  அதற்கு அண்ணாமலை,  ஆமாம், நான் பொறுக்கிதான் என்று சொல்லி, அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

 புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும் முடிந்த திட்டங்களை அர்ப்பணிப்புதற்காகவும் பிரதமர் மோடி சென்னை வந்திருந்தபோது அவர் பங்கேற்ற விழா மேடையில் முதல்வர் ஸ்டாலின் சில கோரிக்கைகளை முன்வைத்தார்.   இது பெரும் சர்ச்சையானது.  பிரதமர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கணக்கு பிள்ளை.   போல கணக்கு கேட்கிறார் ஸ்டாலின் ஒரு பிரதமரின் மேடையில் முதல்வர் எப்படி நடந்துகொள்ளக் கூடாது என்பதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கைகளே சான்று.  முதலமைச்சரின் பேச்சை எண்ணி வெட்கப்படுகிறோம் என்று அண்ணாமலை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். 

அப்

 ஒவ்வொரு மாநிலத்திற்கும் பிரதமர் செல்லும் போது அவரிடம் அந்தந்த மாநில முதல்வர்கள் தங்கள் கோரிக்கையை வைப்பது இயல்பு என்று திமுகவினர் பதில் சொல்லி வருகின்றனர்.

 இந்த நிலையில் திமுக அமைச்சர் தா. மோ. அன்பரசன்,   அண்ணாமலையை கடுமையாக ஒருமையில் விமர்சித்துப் பேசியுள்ளார்.   அமைச்சர் தனது பேச்சில் வாடா போடா என்று பேசியிருக்கிறார்.

 பிரதமர் கலந்து கொண்ட மேடையில் முதல்வர் பேசியது தவறு என்று அண்ணாமலை சொல்கிறார்.   பிரதமரிடம் கோரிக்கை வைக்காமல் நாங்கள் யாரிடம் கோரிக்கை வைப்பது .  அமெரிக்க ஜனாதிபதியிடமா கோரிக்கை வைக்க முடியும்? தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிதி நிலுவையில் இருக்கிறது.  முடிந்தால் அண்ணாமலை அந்த நிதியை வாங்கிக் கொடுக்க முயற்சி செய்யட்டும் .  கச்சத்தீவை நீக்குவதற்கு இதுவே சரியான நேரம்.   முடிந்தால் அண்ணாமலை அதற்காக மோடியிடம் பேசி பார்க்கட்டும்.

அல்

 இப்படி ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை விட்டுவிட்டு திமுகவினரை தொடர்ந்து விமர்சிப்பதை முதலில் அண்ணாமலை நிறுத்திக்கொள்ள வேண்டும்.  தொடர்ந்து இதுபோல் விமர்சித்து பேசினால் இனி நாங்கள் பேச மாட்டோம் எங்களது அடிமட்ட தொண்டர்கள் தான் பேசுவார்கள்.  அப்புறம்  நீங்கள் சகித்துக்கொள்ள முடியாது.  

 அதிமுக காரர்கள் ஊழல் செய்ததால் தங்கள் மீது வழக்குப் போட்டு விடக்கூடாது என்பதற்காக அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள்.   இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு எப்படியாவது பாஜகவை எதிர்கட்சி ஆக்கிவிடலாம் என்று முயற்சிக்கிறார் அண்ணாமலை.   இந்த வேலையை வேறு எங்காவது வைத்துக் கொள்ளுங்கள் தமிழ்நாட்டில் எடுபடாது.   இனி கோவில்களில் கூட உங்களை நாங்கள் அனுமதிக்கப்போவதில்லை .  கூழ் ஊற்றுவது  முதல் கும்பாபிஷேகம் செய்து வரை நாங்களே செய்யப்போகிறோம்.   அளவுக்கு அளவுக்கு மீறி ஆட்டம் போட்டால் வாலை ஒட்ட நறுக்கி சுண்ணாம்பு வைத்து விடுவோம் என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.

இதற்கு அண்ணாமலை,   ‘’அண்ணாமலை  யார் என்றால் பெரிய பொறுக்கி என்று திமுக அமைச்சர் தா. மோ . அன்பரசன் கூறியிருக்கிறார்.   உண்மையாகவே அமைச்சர் கூறிய வார்த்தையை ஏற்றுக் கொள்கிறேன் . நான் ஒரு பொறுக்கி தான் .  எப்படிப்பட்ட பொறுக்கி என்றால்,   திமுகவின் ஊழல்களை பொறுக்கி, வன்முறையை பொறுக்கி, திமுகவின் அராஜகத்தை பொறுக்கி, சாதாரண  மனிதனாக பொறுக்கி எடுத்துச் சென்று மக்கள் மன்றத்தில் கொடுக்கும் பொறுக்கி.  அதற்காக எனக்கு பொறுக்கி பட்டத்தை கொடுத்தீர்கள் என்றால் நல்ல மனதோடு கம்பீரமாக ஏற்றுக்கொள்கிறேன்’’ என்று பதிலடி கொடுத்திருக்கிறார் அண்ணாமலை.