ஓபிஎஸ்சை செல்லாத 1000 ரூபாய் நோட்டாகத்தான் பார்க்கிறோம் - ராஜன் செல்லப்பா

 
ra

 அதிமுகவை பொறுத்த வரைக்கும் ஓ. பன்னீர்செல்வத்தை செல்லாத ஆயிரம் ரூபாய் நோட்டாகத் தான் பார்க்கிறோம் என்று கூறி இருக்கிறார் எடப்பாடி அணியில் இருக்கும் ராஜன் செல்லப்பா.

 ராஜன் செல்லப்பா எம்எல்ஏ இன்று திருப்பரங்குன்றத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த வாக்காளர் திருத்தம், புதிய வாக்காளர் சேர்ப்பு பணிகளை பார்வையிட்டுள்ளார்.   பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது,  ஓபிஎஸ் விவகாரம் குறித்தும்,  தமிழகம் வந்த பிரதமர் மோடி- உள்துறை அமைச்சர் அமித்ஷா இருவரையும் எடப்பாடியும் , ஓபிஎஸ்சும் சந்தித்தது குறித்து எழுந்த கேள்விக்கு,  

oe

அதிமுகவை பொறுத்தவரைக்கும் ஒருவரை கட்சியிலிருந்து நீக்கி விட்டால் அவருடன் யாரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது.  அதே மாதிரி ஒருவரை கட்சியில் இருந்து நீக்கி விட்டால் மீண்டும் அவரை இணைப்பது என்பது சத்தியமே இல்லை என்றிருக்கிறார்.

 எடப்பாடி பழனிச்சாமியும் ஓ. பன்னீர்செல்வமும் மீண்டும் இணைவதற்கான வாய்ப்பே இல்லை என்று அழுத்தமாக சொல்லியிருக்கும் ராஜன் செல்லப்பா,  அதிமுகவை பொறுத்த வரைக்கும் ஓபிஎஸ்ஐ செல்லாத ஆயிரம் ரூபாய் நோட்டாகத்தான் பார்க்கிறோம்.  அவருடன் யாரும் எந்த தொடர்பும் கிடையாது என்றவர்,   பிரதமரை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்ததில் எந்த அரசியல் உள்நோக்கமும் கிடையாது .  கூட்டணி கட்சி என்பதால் மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்துள்ளார் என்று கூறியிருக்கிறார்.