எங்க பிரச்சனையை நாங்க பார்த்துக்குறோம்..நாங்க அரசியலை விட்டே விலகுகிறோம்.. வெடித்த செல்லுர்ராஜூ

 
se

குண்டு சட்டிக்குள் முழு பூசணிக்காயை மறைக்க பார்க்கிறார்கள் என்று திமுக மீது குற்றம் சாட்டும் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ, நாளைக்கே  தேர்தல் வைக்க சொல்லுங்கள்.  திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் அரசியலை விட்டு விலகுகிறோம் என்கிறார்.

 மதுரை பழங்காநத்தம் சமுதாயக்கூடம் திறப்பு விழாவில் பங்கேற்ற செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசிய போது.  ’’ திமுக அரசு மின் கட்டண உயர்வால் மக்களை கசக்கிப் பிழிகிறது.   இந்த திமுக அரசு சொன்னதை எதையுமே நிறைவேற்றவில்லை .  ஒன்று இரண்டை நிறைவேற்றி விட்டதாக அமைச்சர்கள் சொல்லுகிறார்கள்.   ஆனால் குண்டு சட்டிக்குள் முழு பூசணிக்காயை மறைக்க பார்க்கிறார்கள்.  பொய் சொல்லி மக்களை ஏமாற்றி இருக்கிறார்கள்.   நாங்கள் குறை சொன்னால் எதிர்க்கட்சி காழ்ப்புணர்ச்சி பேசுகிறார்கள் என்று சொல்கிறார்கள்.   உண்மையில் திமுக எதுவுமே செய்யவில்லை என்று மக்கள் சொல்கிறார்கள்’’என்கிறார்.

s

‘’திமுக ஆட்சியில் மக்களுக்கு துன்பம் துயரம் நிறைந்திருக்கிறது.  திமுக ஆட்சியில்  ஒரு கொடுமை சென்றால் இன்னொரு கொடுமை நடக்கிறது.   திமுக ஆட்சி  அமைந்ததிலிருந்து மக்கள் பயத்தில் இருக்கிறார்கள்.   பயத்தில் இருக்கும் மக்களுக்கு பூஸ்ட் ஆக ஏதாவது கொடுக்க வேண்டும்.  ஆனால் துன்பத்தையும் துயரத்தையும் மட்டுமே கொடுக்கும் வகையில் திமுக அரசு செயல்படுகிறது’’என்றார்.

 ’’திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு என்பது கேலிக்கூத்தாகதான் இருக்கிறது.   மாணவிகளுக்கு பெண்களுக்கு,  பாதுகாப்பு இல்லை.  தொழிலதிபர்கள் நிம்மதியாக இல்லை.    ஒன்றிய அரசு ஒன்றிய அரசு என்று எப்போதும் மத்திய அரசை குறை சொல்லி எங்களை அடிமை அரசு என சொல்லி தற்போது திமுக அடிமை அரசாக உள்ளது.  கேட்டால் திராவிட மாடல் என்று என சொல்லுவது கேலிக்கூத்தாக இருக்கிறது’’ என்று கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.

’’ எங்கள் கட்சியில் உள்ள பிரச்சனைகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் . எடப்பாடி பழனிச்சாமி தொண்டர்கள் ஏற்றுக்கொண்டு பொதுச்செயலாளர் ஆக்கி இருக்கிறோம் நாளைக்கே தேர்தல் வைக்க சொல்லுங்கள் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் அரசியலை விட்டு சவால் விட்டார்