மாஜி எம்பி மஸ்தான் கொலை செய்யப்பட்டாரா?

 
m

 திமுக முன்னாள் எம்பி மஸ்தான் செய்யப்பட்டாரா என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது.   மாரடப்பால் மறைந்தார் என்றிருந்த மஸ்தான் மரணத்தில் திடீரென்று போலீசார் நான்கு பேரிடம் விசாரணை நடத்தி வருவதால் இந்த பரபரப்பு இழுந்திருந்திருக்கிறது.

 முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மஸ்தான் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய துணை தலைவர் ஆக இருந்து வந்தார். 1995 ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து  மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார் மஸ்தான்.  2001 ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வந்தார்.  சில ஆண்டுகளுக்கு முன்பு திமுகவில் இணைந்தார்.  திமுகவில் அவருக்கு சிறுபான்மை நல உரிமை பிரிவு செயலாளர் வழங்கப்பட்டது . தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையர் துணை தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டது சென்னை அடுத்த ஊரப்பாக்கத்தில் கடந்த 22 ஆம் தேதி அன்று காரில் சென்ற போது நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்தபோது சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார் என்று தகவல் பரவியது.

s

மஸ்தானின் இந்த திடீர் மரணத்தில் சந்தேகம்  இருப்பதாக அவரது உறவினர்கள் சொன்ன புகாரின் அடிப்படையில் கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய வருகின்றார்கள்.   இந்த வழக்கில் நான்கு பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாரடைப்பு மரணம் என்று சொல்லப்பட்டிருந்த நிலையில் இப்போது நான்கு பேரிடம் இருந்து வருவதால் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் முன் விரோதத்தால் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனால் மாஜி எம்பி மஸ்தான் மரண வழக்கில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.