அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரும்; அண்ணாமலை தலைமையில் ஆட்சி அமையும்- விபி துரைசாமி

 
vb duraisamy

பாஜக மாநில துணைத் தலைவர் திரு.வி.பி.துரைசாமி நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்தார். 
 

அப்போது பேசிய அவர், "சட்ட ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி நீதிமன்ற உத்தரவையை மீறி ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது. நீதிமன்றம் உத்தரவு பிற்பித்ததால் அதனை நிறைவேற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. நீதிமன்றம் பேரணி நடத்த உத்தரவு பிற்பித்த நிலையில் அடுத்த நாள் அரசு தடை விதித்ததை சட்டம் தெரிந்தவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சட்டத்திற்கு முரணானது. ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நவம்பர் 6 தேதி நடத்திக்கொள்ளலாம்  அரசு சட்டப்படி பாதுகாப்பு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

திமுகவின் அணிகளாக விளங்குகின்ற காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக கட்சிகள் மதநல்லிணக்க மனித சங்கலி நடத்துவதாக தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் மதநல்லிணக்கம் பேணுவதற்காக திமுக கூட்டணிக்கட்சிகள் சொல்வதை பார்த்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய் விட்டதாக கூட்டணி கட்சியினரே ஒத்துக்கொள்கிரார்கள். தமிழகத்தில் மதநல்லிணக்கம் நன்றாக உள்ளது. இதில் சந்தேகமே இல்லை.

இஸ்லாமிய, கிறிஸ்துவ பெருமக்கள் பாஜகவின் அனுகுமுறையை ஏற்றுக்கொண்டு பாஜகவில் உறுப்பினராக சேர்கிறார்கள். தேசிய புலனாய்வுத்துறை 13 மாநிலங்களில் பலரை கைது செய்யப்பட்ட நிலையில் மதநல்லிணக்கம் கெட்டதாக திமுகவில் உள்ள அணிகளில் ( கூட்டணி கட்சிகள்) ஒன்றாக விளங்கும் கூட்டணிகள் சேர்ந்து கொண்டு எண்ணங்கள், செயல்களை திமுக அரசின் தூண்டுதலின் பெயரில் இந்த மனித சங்கிலியை நடத்துகின்றனர். திமுக எப்போது எல்லாம் ஆட்சி அமைகிறதோ அப்போது எல்லாம் குண்டு கலாச்சாரம் ஏற்படும். திமுகவில் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திமுக துணைப்பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்தேன். திமுக கோட்பாடு, கொள்கை கோட்பாட்டில் இருந்து விலகி போனதால் அதிலிருந்து விலகி பாஜகவின் சிந்தாந்தம்,சாதனைகளை ஏற்றுக்கொண்டு சேர்ந்து விட்டேன்.

தன்னை கேலி, கிண்டல் செய்தார்கள், மனம் புண்படும்படி கமாண்ட் செய்தார்கள். இரண்டரை ஆண்டு காலத்தில் இரண்டாவது பெரிய பொறுப்பில் இருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகியுள்ளார். திமுக தொண்டர்களுக்கும், திமுக தலைமைக்கும் இடைவெளி நிரம்ப ஏற்பட்டு விட்டது. வரும் 9 ம் தேதி திமுக தலைவர் தேர்தலுக்கு பிறகு பலர் விலக வாய்ப்புள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலை வெளிநாட்டிற்கு  சென்று தொழில் தொடங்க ரூ. 5 ஆயிரம் கோடி முதலீடு செய்வதாக திமுக எம்.எல்.ஏ கூறியிருக்கும் செய்தி அபத்தமானது. வரும் 2024 ம் ஆண்டு எம்.எல்.ஏ, எம்.பி தேர்தல் ஒன்றாக வந்தால் நாங்கள் பொறுப்பல்ல என பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் பேசியுள்ளார். தேர்தல் வருவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது.

அப்படி வந்தால் தமிழகத்தில் பாஜக அண்ணாமலை தலைமையில் ஆட்சியும்,மத்தியில் மூன்றாவது முறையாக மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமையும். சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் கண்ணியமாக பேச வேண்டும் என முதல்வர் நினைக்கின்றார். முதல்வரின் கட்டளையை ( எம்.எல்.ஏ,அமைச்சர்)   யாரும் ஏற்றுக் கொள்வதில்லை, பயப்படுவதில்லை. முதல்வரின் அறிவுரையை ஏற்றுக்கொண்டு அமைச்சர்கள் செயல்படுவதில்லை என்பதில் வருத்தத்துக்குரியது. விநாயகர் சதுர்த்தி, தீபாவளி பண்டிகைகளுக்கு முதல்வர் வாழ்த்து சொன்னால் இந்து மதத்திற்கு எதிரான கட்சி திமுக இல்லை என்பதை ஏற்றுக்கொள்கிறோம்" என்றார்.