மூவரில் யார் தலைமையை தொண்டர்கள் விரும்புகிறார்கள்
என் தலைமையைத்தான் தொண்டர்கள் விரும்புகிறார்கள் என்று ஓ.பன்னீர்ச்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி , சசிகலா மூன்று பேரும் சொல்லி வருகிறார்கள். மூவரில் யார் தலைமையை விரும்புகிறார்கள் என்பது தொண்டர்களுக்கே வெளிச்சம்.
அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என தொண்டர்களை விடவும் சசிகலாவும், எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர் செல்வமும் அதிகம் விரும்புகின்றனர். அதற்கு காரணம் அந்த ஒற்றை தலைமைக்கு தாங்கள் வரவேண்டும் என்று இந்த மூவருமே அடித்துக் கொள்கின்றனர் .
அதிமுகவுக்கு ஒற்றை தலைமை கொண்டுவந்து பொதுச்செயலாளர் ஆகிவிட வேண்டும் என்று சசிகலாவும், பன்னீர் செல்வமும், பழனிச்சாமியும் மும்முனைப் போட்டியில் இறங்கி இருக்கின்றனர். இதில், ’’என் தலைமையை தான் தொண்டர்கள் விரும்புகிறார்கள் ’’என்று மூன்று பேருமே சொல்லி வருகிறார்கள்.
என் தலைமையை தான் தொண்டர்கள் விரும்புகிறார்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழுவில் பொதுச் செயலாளராக முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனால் ஓபிஎஸ் தரப்பினரோ, அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் தான் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். அவர்களை விலைகொடுத்து வாங்கி விட்டார்கள். ஆனால் தொண்டர்களை அவர்களால் விலை கொடுத்து வாங்க முடியாது. அவர்கள் ஓபிஎஸ் பக்கம் தான் இருக்கிறார்கள். ஓபிஎஸ் தலைமையைத்தான் தொண்டர்கள் விரும்புகிறார்கள் என்கிறார்கள்.
இந்த நிலையில் சசிகலாவும் அதையே சொல்லி இருக்கிறார். இன்றைக்கு அரசியல் புரட்சி பயணத்தை மேற்கொண்டிருக்கும் அவர் சென்னையிலிருந்து புறப்பட்டு திருத்தணிக்கு சென்றிருக்கிறார். திருத்தணியில் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசியபோது, அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமை நிச்சயம் வரும். என் தலைமையில் அதிமுக இயங்க வேண்டும் என்றுதான் தொண்டர்கள் விரும்புகிறார்கள் என்று சொல்லி இருக்கிறார்.