பல காங்கிரஸ் தலைவர்கள் பா.ஜ.க.வில் இணைய திட்டமிட்டுள்ளதால் கமல் நாத் நிறைய கார் வாங்க வேண்டும்.. விஜய்வர்கியா கிண்டல்

 
மம்தாவால் 100 இடங்களில் கூட ஜெயிக்க முடியாது…. பா.ஜ.க.வின் மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா

காங்கிரஸின் பல பெரிய தலைவர்கள் பா.ஜ.க.வில் இணைய திட்டமிட்டுள்ளதால், கமல் நாத் நிறைய கார் வாங்க வேண்டும் என்று பா.ஜ.க.வின் விஜய்வர்கியா கிண்டலாக தெரிவித்தார்.

காங்கிரஸிலிருந்து பலர் வெளியேறுவது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல் நாத் கூறுகையில் நீங்க என்ன யோசிக்கிறாய்? காங்கிரஸ் அழியுமா? சிலர் பா.ஜ.க.வில் சேர விரும்புவதாகச் சொல்கிறீர்கள். பா.ஜ.க.வில் சேர விரும்புபவர்கள் போகலாம். நாங்கள் யாரையும் தடுக்க விரும்பவில்லை. அவர்கள் (காங்கிரஸ் தலைவர்கள்-நிர்வாகிகள்) சென்று அவர்களின் எதிர்காலத்தை பார்க்க விரும்பினால், அவர்களின் எண்ணங்கள் பா.ஜ.க.வுடன் இணைந்து செயல்படுகின்றன. அவர்கள் பா.ஜ.க.வுக்கு சென்று இணைய எனது காரை கடனாக கொடுப்பேன் என தெரிவித்தார்.

மோடிக்கு முன்பே முன்னாள் முதல்வர் கமல்நாத் வல்ல பவனில் பொது மக்களுக்கு தடை விதித்தார்.. சிந்தியா தாக்கு..

பா.ஜ.க.வுக்கு சென்று இணைய காரை கடனாக கொடுப்பேன் என்ற கமல் நாத்தை பா.ஜ.க. கடுமையாக கிண்டல் செய்துள்ளது.  பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான கைலாஷ் விஜய்வர்கியா, ஜபல்பூரில் சுவாமி ஸ்வருபானந்த் சரஸ்வதி மகாராஜூக்கு  அஞ்சலி செலுத்த  ஜோதேஷ்வருக்கு சென்று இருந்தார். அங்கு கமல் நாத்தின் கருத்து குறித்து கைலாஷ் விஜய்வர்கியாவிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு கைலாஷ் விஜய்வர்கியா பதிலளிக்கையில், கமல் நாத் அப்படி நினைத்தால், காங்கிரஸின் பல பெரிய தலைவர்கள் பா.ஜ.க.வில் சேர திட்டமிட்டுள்ளதால், அவர் நிச்சயமாக நிறைய கார்களை வாங்க வேண்டும் என கிண்டலாக தெரிவித்தார்.

சிவ்ராஜ் சிங் சவுகான்

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய பிரதேச முதல்வருமான சிவ்ராஜ் சிங் சவுகான் கூட்டம் ஒன்றில் பேசுகையில், தொண்டர்களை மதிக்காத ஒரு கட்சி எப்படி மக்களுக்கு நல்லது செய்ய முடியும்? கட்சியின் பெரிய தலைவர்கள் கட்சி தொண்டர்களை இப்படி கூறும்போது, அவர்கள் தொண்டர்களை எந்த அளவுக்கு மதிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும் என தெரிவித்தார்.