விஜய் அவசர ஆலோசனை! பனையூரில் திரண்ட மன்றத்தினர்

 
b

விஜய்க்கும் அவரது தந்தை எஸ். ஏ. சந்திரசேகருக்குமான அப்பா -மகன் சண்டை இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது. இதனால் தற்போது விஜய் மக்கள் இயக்கத்திற்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

 கடந்த மூன்றாம் தேதி அன்று எஸ்.ஏ. சந்திரசேகருக்கு 80ஆவது  வயதில் சதாபிஷேகம் நடந்தது.  திருக்கடையூர் கோயிலில் நடந்த சதாபிஷேக விழாவில் விஜய் பங்கேற்கவில்லை.  இது ரசிகர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.  கடுமையான  விமர்சனம் எழுந்திருக்கிறது.

ப்ட்

 இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கம் குறித்த கேள்விக்கு விஜய் மக்கள் இயக்கம் வலுவிழந்து விட்டது .  அந்த இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்களை மீண்டும் சேர்த்தால் தான் விஜய் மக்கள் இயக்கத்திற்கு எதிர்காலம் நன்றாக இருக்கும்.   இதைப்பற்றி நான் பலமுறை விஜய்யிடம் சொல்லி விட்டேன் என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார் எஸ் .ஏ. சந்திரசேகர்.

 விஜய் மக்கள் இயக்கத்தினர் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று இருக்கும் நிலையில் அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தல் சட்டமன்றத் தேர்தலில் விஜய்  மக்கள் இயக்கத்தினர் போட்டியிடப் போகிறார்கள் என்ற பேச்சு இருந்து வரும் நிலையில்  சந்திரசேகர் இப்படி ஒரு குற்றச்சாட்டை முன் வைத்ததும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.  

 இது விஜய் மக்கள் இயக்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தி விட்டது .  இதனால் நேற்று இரவு அவசர அவசரமாக விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்லி ஆனந்த் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு திடீரென்று போன் செய்து, சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள அலுவலகத்தில் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.

 இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக தகவல் .  இது ஆலோசனை கூட்டத்தில் விஜய்யும் பங்கேற்பார் என்று தெரிகிறது. இல்லையென்றால் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து புஸ்லி ஆனந்த் மட்டும் தனியாக விஜய் இடம் கலந்து பேசி அறிவிக்க இருக்கிறார் என்றும் தகவல்.