விஜய் - உதயநிதி கூட்டணி : வளரும் கிளைகள்- முளைக்கும் கொடி கம்பங்கள்

 
vv

 அரசியலில் ஆழமாக காலூன்ற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் விஜய் மக்கள் இயக்கத்தை தொடங்கி முன்னெடுத்து வருகிறார் விஜய்  என்று அவ்வியக்கத்தின் நிர்வாகிகள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.  அதனாலதான் புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஸ்லி ஆனந்தை விஜய் மக்கள் இயக்கத்தி பொதுச்செயலாளர் ஆகியிருக்கிறார் விஜய் என்கிறார்கள்.

 புஸ்லி ஆனந்த் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஆன பின்னர் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியை போலவே செயல்பட்டு வருகிறது என்கிற பேச்சும் இருக்கிறது.  அதற்கு ஏற்றார்போல் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்  விஜய் மக்கள் இயக்கத்தினர் பங்கேற்று வெற்றியும் பெற்று உள்ளனர்.  அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலை விஜய் மக்கள் இயக்கம் குறி வைத்திருக்கிறது.  அதற்கான முன் நகர்வுகள் புஸ்லி ஆனந்த்  மூலம் நடந்து வருகின்றன.

vu

 இந்த நிலையில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின்,  விஜய்யுடன் கூட்டணி அமைக்க பேச்சு நடத்தி இருப்பதாக தகவல் .  அதாவது அடுத்து வரும் தேர்தலில் திமுக- விஜய் மக்கள் இயக்கம் இணைந்து போட்டியிட போவதில்லை.   அதிமுகவின் வாக்குகளை சிதறடிக்க அதிமுகவுக்கு எதிராக விஜய்யை களம் இறக்கி விட உதயநிதி ஸ்டாலின் திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார்  என்று தகவல்.

அதற்காகத்தான் பீஸ்ட் திரைப்படம் ஓடாது என்று தெரிந்தும் அந்த படத்தை வாங்கி ஓட்டி இருக்கிறார்கள் என்றும் தகவல் பரவுகிறது .  அதிமுக மட்டுமல்லாது அபாஜக-வுக்கு எதிராக களமிறங்கும் படி விஜய்க்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறதாம்.   அந்த டீலுக்கு விஜய் ஓகே சொன்ன பின்னர்தான் பீஸ்ட் படத்தையே வாங்கி ரிலீஸ் செய்தார்கள் என்கிறார்கள்.

vb

அதற்கேற்றார்போல் விஜய்யும்,  அதிமுகவின் கொடிக்கம்பங்கள் எங்கெல்லாம் இருக்கிறதோ அதற்கு பக்கத்தில் எல்லாம் விஜய் மக்கள் இயக்க கொடிக்கம்பம் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறாராம்.    விஜய் மக்கள் இயக்கத்தினரும் அப்படியே செய்து வருகிறார்களாம் .  அதுமட்டுமல்லாது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் விஜய் மக்கள் இயக்க கிளைகளை அதிகம் துவங்க வேண்டும் அந்த கிளைகள் மூலம் மக்களுக்கு நற்பணிகள் அதிகம் செய்யவேண்டும் என்ற புதிய உத்தரவு பிறப்பித்திருக்கிறாராம் விஜய்.

அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலுக்குள் ஒன்றரை கோடி உறுப்பினர்கள் கொண்ட  இயக்கமாக விஜய் மக்கள் இயக்கம் மாற வேண்டும் என்று விரும்புகிறாராம் விஜய்.   ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட கட்சி அதிமுக கட்சி என  அந்த கட்சி தலைமை கெத்து காட்டி வருகின்ற நிலையில்,   விஜய்யும் அந்த கெத்து காட்ட முடிவெடுத்துள்ளாராம்.

வ்க்

 முன்னதாக தனது பிறந்த நாள் ஜூன் 22ஆம் தேதி வரவிருக்கும் நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விஜய் மக்கள் இயக்க கிளைகளை அதிகளவில் திறந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் படி அறிவுறுத்தி இருக்கிறாராம் விஜய்.   அதற்கேற்றார்போல்  உளுந்தூர்பேட்டை சட்டசபைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 70 விஜய் மக்கள் இயக்க கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளார் புஸ்லி ஆனந்த்.   முதற்கட்டமாக இருபத்தி நான்கு கிளைகள் திறக்கப்பட்டிருக்கின்றன.  பொதுமக்களுக்கு புடவைகள் மற்றும் குடங்கள்,  மாணவர்களுக்கு டிபன் பாக்ஸ், நோட்டு புத்தகங்கள் உள்ளிட்டவற்றை வழங்கி இருக்கிறார்கள்.

அரசியலில் இருக்க வேண்டும் என்கிற விஜய் முயற்சியும் , அதிமுகவுக்கு எதிராக அரசியல் செய்ய வேண்டும் என்கிற உதயநிதி முயற்சியும் கைகோர்த்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.