பாஜகவில் வீடியோ-ஆடியோ கலாச்சாரம்! அண்ணாமலை - மதன் மீது காயத்ரி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

 
g

தமிழக பாஜகவின் மூத்த நிர்வாகி கே.டி.ராகவன் வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் பாஜகவில் இருந்த மதன்.  அண்ணாமலை சொல்லித்தான் இந்த வீடியோவை வெளியிட்டேன் என்று அவர் சொல்லி பாஜகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தார்.   இதன் பின்னர் சூர்யா சிவா -டெய்சி சரண் ஆடியோ வெளியாகி பாஜகவில் மேலும் சலசலப்பு அதிகமானது . 

g

இதில் டெய்சி சரணுக்கு ஆதரவாக காயத்ரி ரகுராம் குரல் கொடுத்ததால் கட்சியை களங்கப்படுத்தி விட்டதாக சொல்லி அவரை ஆறு மாதங்கள் நீக்கம் செய்து பொறுப்பில் இருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தார் மாநில தலைவர் அண்ணாமலை.  அதன் பின்னர் அந்த பொறுப்பை இசையமைப்பாளர் தினாவுக்கு வழங்கிவிட்டார் அண்ணாமலை.  இதனால் காயத்ரிக்கு மீண்டும்  கட்சிக்குள் ஏதேனும் பொறுப்பு கிடைக்குமா? இல்லை கட்சியை விட்டு அவர் துரத்தப்படுவாரா? என்கிற நிலை இருக்கிறது.

 இந்த நிலையில் அண்ணாமலைக்கு எதிராக அவர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.   முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசனை சென்னையில் உள்ள ஓட்டலில் சந்தித்து ஒரு மணி நேரத்திற்கு மேல் காயத்திரி  பேசியதாக அண்ணாமலை ஆதரவாளர் அமர்பிரசாத் ரெட்டி குற்றம் சாட்டியிருந்தார்.   இதை அடுத்து அண்ணாமலையே துபாயில் ஒரு திமுக பிரமுகரை சந்தித்து காயத்ரி பேசினார் என்று பாஜக கூட்டத்தில்  பேசியதாக சொல்லி, தன் மீது ஏன் இப்படி அபாண்டமாக பழி சுமத்துகிறார் என்று ஆவேசப்பட்டிருந்தார். 

தமிழக பாஜகவின் முன்னாள் மாநில தலைவரும் தற்போதைய மத்திய இணை அமைச்சருமான எல். முருகனின் ஆதரவாளர் காயத்ரி ரகுராம்.  அவர் மூலமாக முருகன் அண்ணாமலைக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்றும் சூர்யா சிவா குற்றம் சாட்டியிருந்தார்.

m

  வீடியோ, ஆடியோ விவகாரங்கள் பாஜகவில் பரவுவதற்கு அண்ணாமலையும் மதனும் பாஜகவில் இணைந்த பிறகு தான் இந்த கலாச்சாரம் நடக்கிறது என்கிறார் காயத்ரி ரகுராம் .  கட்சியை  களங்கப்படுத்துவது அண்ணாமலை தான் என்றும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.

 இது குறித்து அவர்,   ‘’சூர்யா சிவா ஹனிட்ராப்பின் பண்டோரா பெட்டியைத் திறந்தார். முக்தர் அவர்கள், சூரிய சிவா சத்தியம் டிவி பேட்டியை பார்த்தேன். போலீசார் விசாரிக்க வேண்டும். இதுபோன்ற செயல்களை நான் கண்டிக்கிறேன். அண்ணாமலை ஜியும் மதனும் பாஜகவில் இணைந்த பிறகுதான் பாஜகவில் வீடியோ ஆடியோ கலாச்சாரம் வந்தது.  இப்போது எங்கள் பாஜக கட்சிக்கு களங்கம் கொண்டு வருவது யார்?

am

மதன் மீது ஏன் புகார் இல்லை? ஆடியோ மற்றும் வீடியோவை வெளியிட அண்ணாமலை ஜி ஏன் ஒப்புக்கொண்டார்? இந்த பிரச்சினையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் தவறான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏன் இன்னும் வீடியோக்கள் ஆடியோவை அப்படியே வைத்திருக்க வேண்டும், ஏன் அழிக்கக்கூடாது?

ஆடியோ வீடியோ வெளியிடுவது வேலையா? புகார் செய்தாலும், அத்தகைய விசாரணை இல்லை. நாங்கள் அறிவுறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகிறோம். இது நீடித்தால் பாஜக பெயரை கெடுக்கும். பல பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். தேசிய பாஜக நடவடிக்கை எடுக்க வேண்டும்.   தலைவரே பலரின் முன்னிலையில் ஒரு பெண்ணை மரியாதை இல்லாமல் குற்றம் சாட்டி, மோசமாகப் பேசுகிறார் (துபாய் குற்றச்சாட்டுகள்). அழகு இதுவா?பொறுமைக்கும் பழி சுமத்துவதற்கும் எல்லை உண்டு. சிக்கலைக் கையாள்வது மற்றும் விலகிச் செல்வது இனி வேலை செய்யாது. பெண்கள் பாதிக்கப்படுவதால் நான் குரல் கொடுப்பேன்.

d

உழைக்கும் ஒவ்வொரு காரியகர்த்தாவையும் அகற்றிவிட்டு, குண்டர்களை வைத்து, காரியகர்த்தாக்களை அச்சுறுத்துவதுதான் ஒரே குறிக்கோள், புதிய வேலையா? நீங்கள் எங்களை அகற்ற விரும்பினால் தயவுசெய்து எங்களை அகற்றவும்.  ஆனால் ஏன் எங்களை தரம் தாழ்ந்து அடிக்க வேண்டும் மற்றும் எங்களை பற்றி பேச வேண்டும்?’’என்ற கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.