வீடியோ விவகாரம் - பாஜக நிர்வாகிக்கு பளார்; நடிகைக்கு காப்பு; சிறுவனுக்கும் காப்பு

 
vi

 மராட்டிய மாநில பாஜகவின் டுவிட்டர் பக்கத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் பேசும் வீடியோ ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு பதிவேற்றம் செய்யப்பட்டது.   அந்த வீடியோவின் கீழே,    நாத்திகர் சரத் பவர் எப்போதும் இந்து மதத்தை வெறுக்கிறார்.  இந்த நிலைப்பாட்டை எடுக்காமல் அவரால் அரசியலில் இந்த நிலையை சாதித்து இருக்க முடியாது என்று பதிவிடப்பட்டிருந்தது.


 பாஜக பதிவேற்றிய அந்த வீடியோ சித்தரிக்கப்பட்டது என்றும் உண்மையானது அல்ல என்றும் பலரும் சுட்டிக்காட்டி வந்தனர்.   உண்மையான வீடியோவில் சரத்பவார் ஜவகர் ரதோட்டின் கவிதைகள் மட்டுமே குறிப்பிட்டு பேசுவார் என்றும் கூறி வந்தனர்.

sa

 இந்த வீடியோ தொடர்பாக  ’’நீங்கள் பிராமணர்களை வெறுக்கின்றீர்கள்.  உங்களுக்கு நரகம் காத்துக் கொண்டிருக்கிறது’’ என்று தனது  முகநூல் பக்கத்தில் பகிர்ந்ததற்காக மராட்டிய நடிகை கேடகி சிதாலே நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.  அதனால் அவர் மீது மராட்டிய மாநிலம் முழுவதும் 200 காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இதனால் அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.   இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை  பதினெட்டாம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி இருக்கிறது.

ac

 பாஜக வெளியிட்ட அந்த வீடியோவை தொடர்பாக தனது வலைத்தளத்தில் பகிர்ந்த 23 வயது மாணவர் கைது செய்யப்பட்டார்.   இந்த நிலையில் சரத்பவருக்கு எதிராக அவதூறு கருத்தை பதிவு ஏற்றியதாக மராட்டிய பாஜக செய்தி தொடர்பாளர் விநாயக் அம்பேகரை  தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் தாக்கியுள்ளனர். 

 இதுகுறித்து தாக்குதல் வீடியோவை பாஜக மராட்டிய மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டில் வெளியிட்டிருக்கிறார்.   அதில் அவர்,   ’’மராட்டிய பிரதேச பாஜகவின் செய்தி தொடர்பாளர் விநாயக் அம்பேகரர் என்சிபி குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளார்.  இந்த தாக்குதலை பாஜக சார்பில் உண்மையாக கண்டிக்கிறேன் . என்சிபி குண்டர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.