அண்ணாமலைக்கும் சேர்த்து வீரவணக்கம் கூட்டம் நடந்து இருக்கும் - திமுக

 
ann

இண்டிகோ விமானத்தில் கடந்த டிசம்பர் 10ஆம் தேதி அன்று சென்னையிலிருந்து திருச்சிக்கு சென்ற போது விமானத்தின் அவசர கால கதவை பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா திறந்ததாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.   இது குறித்து விளக்கம் அளிக்க தேஜஸ்வி சூர்யாவுக்கு விமான போக்குவரத்து துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.   தேஜஸ்வி சூர்யாவுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் அந்த விமானத்தில் பயணித்ததாக கூறப்படுகிறது.  தவறுதலாக கை நீட்டும்போது கதவு திறந்துகொண்டது என்று தேஜஸ்வி சூர்யாவும், அண்ணாமலையும் விளக்கம் அளித்திருப்பதாக தகவல்.

te

இதையடுத்து,  விமானம் புறப்படுவதற்கு முன்பு தவறுதலாக அவசர வழி கதவை திறந்ததாக தேஜஸ்வி சூரியா தெரிவித்திருக்கிறார்.  கதவு திறக்கப்பட்டு விட்டது என்பதை அவரே விமான குழுவிடமும் தெரியப்படுத்தி இருக்கிறார்.  பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகு விமானம் பயணத்தை தொடங்கியது.   தாமதமானதற்கு மன்னிப்பு கடிதமும் கொடுத்திருக்கிறார் தேஜஸ்வி சூர்யா என்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

இதற்கு நடிகை காயத்ரி ரகுராம்,  2017ல் இதே தேசிய குற்றத்திற்காக ஒரு சாமானியர் கைது செய்யப்பட்டார். ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை அருகில் அமர்ந்திருந்தபோது, எச்சரிக்கவில்லையா? அவர் மயக்கத்தில் இருந்தாரா இல்லை விளையாடிக் கொண்டிருந்தார்கள்? கவர்னரைப் போல தேஜஸ்வியும் அண்ணாமலையால் சிக்கலில் மாட்டிக்கொண்டாரா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

g

அவர் மேலும்,  இவ்வளவு பெரிய தேசிய குற்றத்திற்கு மன்னிப்பு ஒரு சாக்கு. இது போன்ற தேசிய குற்றத்திற்கு ஒரு சாமானியனும் மன்னிப்பு கேட்டால் மன்னிக்க முடியுமா? தேஜஸ்வி மற்றும் அண்ணாமலைக்கு ஒரு சாமானியரைப் போலவே நடத்தப்பட வேண்டும். எந்த விதிகள் மற்றும் சட்டம் இருந்தாலும் அது பொருந்தும் என்று ஆவேசமாகிறார்.

இதே போன்று  திமுக மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தியும்,  விமானங்களை கடத்துவது, சேதப்படுத்துவது பல நாடுகளில் பயங்கரவாத நடவடிக்கை ஆகும் . அப்படிப்பட்ட செயல் தான் அண்ணாமலை&கோ செய்தது.  நின்ற விமானத்தில் கதவை திறந்ததால் பல உயிர்கள் தம்பித்தது.  ஓடும் விமானத்தில் கதவை திறந்து இருந்தால் அண்ணாமலைக்கும் சேர்த்து வீரவணக்கம் கூட்டம் நடந்து இருக்கும் என்கிறார்

r

அவர் மேலும்,  அண்ணாமலையின் இந்த செயல் ஒரு பயங்கரவாத நடவடிக்கை தான்,தேசவிரோத தடுப்பு நடவடிக்கை சட்டத்தில் இந்த  அண்ணாமலை அரைவேக்காடு அரசியவாதியை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.