அடிப்படை பிரச்சினைகள், அநீதி, ஊழலுக்கு எதிராக மக்கள் குரல் எழுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது.. வருண்காந்தி பேச்சு

 
வருண் காந்தி

மத்தியிலும், உத்த பிரதேசத்திலும் பா.ஜ.க. ஆட்சியில் உள்ள நிலையில், அடிப்படை பிரச்சினைகள், அநீதி, ஊழலுக்கு எதிராக மக்கள் குரல் எழுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று வருண் காந்தி பேசியிருப்பது அந்த கட்சிக்குள் புகைச்சலை  ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசம் பிலிபிட் மக்களவை தொகுதியின் எம்.பி.யாக இருப்பவர் வருண் காந்தி. சமீபகாலமாக வருண் காந்தி பல்வேறு விவகாரங்களில் தனது சொந்த கட்சியே (பா.ஜ.க.) விமர்சனம் செய்து வருகிறார். இது பா.ஜ.க.வினர் மத்தியில் அவர் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உத்தர பிரதேசம் பிலிபிட் தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வருண் காந்தி பேசுகையில், அடிப்படை பிரச்சினைகள், அநீதி, ஊழலுக்கு எதிராக மக்கள் குரல் எழுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று தெரிவித்தார்.

பா.ஜ.க.
அந்த நிகழ்ச்சியில் வருண் காந்தி பேசுகையில் கூறியதாவது: வேலையின்மை, ஊழல் மற்றும் பணவீக்கத்துக்கு எதிரான எனது போராட்டத்தை அவை நிறுத்தப்படும் வரை தொடருவேன். இந்த நாட்டில் வேலை வாய்ப்பு இல்லாமல் போகும் வரை, உங்கள் பிள்ளைகளுக்கு வேலை கிடைக்காத வரை என்னுடைய போராட்டம் தொடரும். ஊழலுக்கு எதிரான எங்கள் போராட்டத்தையும் தொடருவோம். 

4 மாதத்தில் வேலையிழந்த 2 கோடி பேர்… வேலையின்மை உண்மையை மறைக்க முடியாது… ராகுல் காந்தி ஆவேசம்

எங்கள் முன்னோர்களின் தியாகம் வீண் போக அனுமதிக்க மாட்டோம். அடிப்படை பிரச்சினைகள், அநீதி, ஊழலுக்கு எதிராக மக்கள் குரல் எழுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார். உத்தர பிரதேசத்திலும்,  மத்தியிலும் பா.ஜ.க. ஆட்சி நடக்கும் நிலையில், அடிப்படை பிரச்சினைகள், அநீதி, ஊழலுக்கு எதிராக மக்கள் குரல் எழுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று வருண் காந்தி பேசியிருப்பது பா.ஜ.க.வினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.