வேலையில்லாத இளைஞர்களின் வலியையும், இதயத்தையும் புரிந்து கொண்ட பிரதமருக்கு நன்றி.. வருண் காந்தி கிண்டல்

 
வயது வந்த குடிமக்கள் அனைவரும் உடல் உறுப்பு நன்கொடையாளர்களாக பதிவு செய்ய மசோதா.. வருண் காந்தி

அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு வேலை என்ற பிரதமர் மோடியின் உத்தரவிட்டதை குறிப்பிட்டு, வேலையில்லாத இளைஞர்களின் வலியையும் இதயத்தையும் புரிந்து கொண்ட பிரதமருக்கு நன்றி என பா.ஜ.க. எம்.பி. வருண் காந்தி கிண்டல் செய்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி அனைத்து துறைகள் மற்றும் அமைச்சகங்களில் மனித  வளத்தின் நிலையை மதிப்பாய்வு செய்தார். இதனையடுத்து மத்திய அரசின் பல்வேறு துறைகளில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை தேர்வு செய்யும் திட்டத்தை செயல்படுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். 2024ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து இந்த நடவடிக்கையை பிரதமர் மோடி மேற்கொண்டுள்ளார் என பேசப்படுகிறது.

வேலைவாய்ப்பு

இந்நிலையில், சமீபகாலமாக சொந்த கட்சியை விமர்சனம் செய்து வரும் பா.ஜ.க. எம்.பி. வருண் காந்தி, 10 லட்சம் பேருக்கு வேலை விவகாரத்தில் பிரதமர் மோடியை மறைமுகமாக கிண்டல் செய்துள்ளார். வருண் காந்தி தனது டிவிடட்டர் கணக்கில், வேலையில்லாத இளைஞர்களின் வலியையும், இதயத்தையும் புரிந்து கொண்ட பிரதமருக்கு நன்றி. 

மோடி

புதிய வேலைகளை உருவாக்குவதுடன், 1 கோடிக்கும் அதிகமான அனுமதிக்கப்பட்ட ஆனால் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அர்த்தமுள்ள முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலைவாய்ப்புகள்  வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற துரித கதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவு செய்துள்ளார்.