"விட்ராதீங்க எப்போ.. இது கோவையின் மான பிரச்சினை" - வானதியின் வார்னிங்!

 
வானதி சீனிவாசன்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் கண் கோவை மீது மட்டுமே இருக்கிறது. ஏனென்றால் தமிழ்நாட்டில் அதிரிபுதிரி வெற்றிபெற்றும் கோவையில் ஒரு தொகுதியில் கூட திமுகவால் வெற்றிபெற முடியவில்லை. இதனையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி உதயநிதி வரை அனைவருமே ஆதங்கமாகப் பேசியுள்ளனர். அதிமுக வலுவாக காலுன்றிருக்கும் தென் மாவட்டங்களைக் கூட கைப்பற்ற முடிந்த நமக்கு, கொங்கு மண்டலத்தில் ஊன்றாதது பெரும் இழுக்கு என்பதை கொங்கு நிர்வாகிகளிடம் ஸ்டாலின் புலம்பியிருக்கிறார்.

இதன் விளைவாகவே கரூரை வாரிச் சுருட்டிய அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கோவை அசைன்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அவரும் இறங்கி வேலை செய்தார். கரூரிலிருந்து ஆட்களைக் கூட்டிக்கொண்டு காரியத்தை முடித்திருக்கிறார். அதற்கான பலன் வாக்குகளை எண்ணும்போது தான் தெரியும். "கரூர் ஆட்களை விரட்டுங்கள்” என வானதி சீனிவாசன், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி ஆகியோர் மாநில தேர்தல் ஆணையத்திடம் வெளிப்படையாகவே குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமானவரி சோதனை | IT Raid in DMK  candidate Senthil Balaji home at Karur – News18 Tamil

இதெல்லாம் செந்தில் பாலாஜியின் எபெக்ட் தான். சொல்லப்போனால் திமுகவுக்கு இது ஒரு மானப் பிரச்சினையாக மாறிவிட்டது. இதை தான் வானதி சீனிவாசன் அடிக்கடி கூறி வருகிறார். தமிழ்நாட்டில் கோவையில் தான் பாஜக ஆழமாக வேரூன்றி உள்ளது. இதனாலேயே அவர் இவ்வாறு பேசி வருகிறார். இன்றும் அதனை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலானது கோவையின் மானப் பிரச்சனையாக மாறியுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் குறிப்பாக எதற்காக வாக்களிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். 

எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் நம்முடைய ஜனநாயக கடமையை அத்தனை பேரும் நிறைவேற்ற வேண்டும். கோவை மாவட்டம் தமிழக அரசின் மிக முக்கியப் புள்ளியாக மாறியுள்ளது. கடந்த சில தினங்களாக கோவையில் நடைபெறக்கூடிய அத்துமீறல்களும் வாக்காளர்களுக்கு கையில் கொடுக்காமல் வீட்டுக்குள்ளயே பணம் பரிசுப் பொருட்கள் ஹாட் பாக்ஸ், கொலுசு போன்றவற்றை தூக்கி எறிந்துவிட்டு, அதன் பின்பு அவரிடம் வாக்கு கேட்பது போன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. சில இடங்களில் வாக்காளர்கள் மிரட்டப்படுகிறார்கள். 

பிரச்சாரத்திற்கு சென்றவர்கள் மிரட்டப்படுகிறார்கள். நேற்று அதிமுக எம்எல்ஏக்கள் இது தொடர்பாக பெரிய போராட்டம் நடத்தியுள்ளனர். இத்தனையும் தாண்டி கோவையின் மானப் பிரச்சனையாக மாற்றப்பட்டு இருக்கக்கூடிய தேர்தல் என்பது கோவை மக்கள் மிகச் சரியாக முடிவு எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. காவல்துறையும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையும் தாண்டி ஜனநாயகம் வெற்றி பெற வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை. இந்தத் தேர்தல் நியாயமாக நடக்குமா என்ற மிகப் பெரிய சந்தேகம் எழுந்துள்ளது” என்றார்.