திமுகவுக்கு தாவுகிறாரா வானதி சீனிவாசன்? செந்தில்பாலாஜி மூலம் பேரம்?

 
va


பாஜக மகளிரணியின் தேசிய தலைவரும், கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணையப் போகிறார், அமைச்சர் செந்தில் பாலாஜி மூலமாக அதற்கான பேரம் பேசப்பட்டு வருகிறது.  திமுக அமைச்சரவையில் வானதிக்கு இடம் அளிக்கப்படும் என்று திமுக தலைமை உறுதி அளித்து இருப்பதாகவும், அதனால் நிச்சயம் வானதி சீனிவாசன் திமுகவில் இணைய இருக்கிறார் என்றும் தகவல் பரவுகிறது.

s

 பாஜகவின் மூத்த தலைவர் வானதி சீனிவாசன்.  தமிழிசை சௌந்தரராஜனுக்கு அடுத்ததாக தமிழக பாஜகவின் தலைவராக வானதி சீனிவாசன் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று பேசப்பட்டது.  ஆனால் வானதி சீனிவாசனுக்கு பாஜகவின் மகளிர் அணி தேசிய தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது.  கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பும் வழங்கப்பட்டது.  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை தோற்கடித்து கோவை தெற்கு தொகுதியில் வென்று எம்எல்ஏ ஆனார் வானதி சீனிவாசன்.

 பாஜக மகளிர் அணி சார்பில் இந்தியா முழுவதும் அவர் சுற்றுப் பயணமும் மேற்கொண்டு வருகிறார்.  ஆனால் கட்சியில் தனக்கு முக்கியத்துவம் இல்லை . பாஜகவில் தனக்கு எதிர்காலம் இல்லை என்று வானதி சீனிவாசன் கருதுவதாக தகவல் பரவுகிறது.  அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தான் இப்படி ஒரு தகவலை பரவ விட்டிருக்கிறார்.  அவருக்கு கிடைத்த தகவல் படி இந்த தகவலை அவர் பகிர்ந்து இருக்கிறார்.

vs

 வானதி சீனிவாசனின் கணவர் சீனிவாசன் வட தமிழக விஎச்பி தலைவராக இருந்து வந்துள்ளார்.  கடந்த 15 ஆண்டுகளாக அவர் இந்த பதவியை வகித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் அந்த பதவியில் இருந்து  நீக்கப்பட்டுள்ளார்.  ஏற்கனவே பாஜகவில் தனக்கு எதிர்காலம் இல்லை என்று நினைக்கும் வானதி சீனிவாசன் தன் கணவரும் விஎச்பி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் திமுகவில் சேர முடிவெடுத்து அதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக கூறுகிறார் சவுக்கு சங்கர்.

 கோவை மாவட்ட திமுக வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.  அவர் கோவை பகுதியில் உள்ள அதிமுக , பாஜக பிரமுகர்களையும் வளைத்து வருகிறார்.  இந்த நிலையில் அவரது மூலமாகத்தான் திமுகவில் இணைய பேச்சு வார்த்தை நடந்து வருவதாக சவுக்கு சங்கர் தனது தகவலில் குறிப்பிட்டு இருக்கிறார் .

தமிழக அமைச்சரவையில் ஸ்டாலின் தலைமையிலான அந்த அமைச்சரவையில் வானதி சீனிவாசனுக்கு இடம் அளிக்கப்படும் என்று திமுக தலைமை உறுதி அளித்து இருப்பதாக சொல்லி அமைச்சரவையில் இடம் என்கிற பேரம் வானதி சீனிவாசனிடம் பேசி வருகிறார் செந்தில் பாலாஜி   என்று குறிப்பிட்டு இருக்கிறார் சவுக்கு சங்கர். 
 பாஜகவின் மூத்த தலைவர் வானதி சீனிவாசன் திமுகவுக்கு தாவுகிறார் என்ற தகவல் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது.