திமுகவின் ஓராண்டு ஆட்சி மலை; பாஜகவின் எட்டாண்டு ஆட்சி மடு- வைகோ

 
vaiko ttn

தி.மு.க வின் ஓர் ஆண்டு ஆட்சி மலை என்றால் பா.ஜ.க வின் எட்டாண்டு ஆட்சி மடு  என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

Tamil Nadu Kashmir: EXPLAINED: Why Vaiko is batting for Farooq Abdullah and  Kashmir is resonating in Tamil Nadu's politics | India News

புதுக்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு திருச்சி வந்த வைகோவிற்கு ம.தி.மு.க வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “ தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் இருப்பதாகவே தெரியவில்லை. மக்களின் பேராதரவோடு கலைஞர் வகுத்து தந்த பாதையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மிக சிறந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காலகட்டம் தமிழ்நாட்டின் பொற்காலம்.

திராவிட கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் எந்த சமரசமுமின்றி முதலமைச்சர் ஸ்டாலினும் தி.மு.கவும் உறுதியோடு இருக்கிறது. தி.மு.க அரசின் ஓர் ஆண்டு கால ஆட்சிக்கும் பா.ஜ.க வின் எட்டாண்டுகால ஆட்சிக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் போன்றது. தி.மு.க வின் ஓர் ஆண்டு ஆட்சியை மலை என்று கூறினால் பா.ஜ.க வின் எட்டாண்டுகள் ஆட்சியை மடு என்று தான் கூற வேண்டும்” எனக் கூறினார்.