கர்கோன் வன்முறை பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முன்கூட்டியே திட்டமிட்ட சதி.. பா.ஜ.க. தலைவர் குற்றச்சாட்டு

 
வி.டி. சர்மா

மத்திய பிரதேசம் கர்கோனில் நடந்த வன்முறை, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா போன்ற அமைப்புகளின் முன்கூட்டியே திட்டமிட்ட சதி என அம்மாநில பா.ஜ.க. தலைவர் வி.டி. சர்மா குற்றம் சாட்டினார்.

மத்திய பிரதேசம் கர்கோனில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடந்த ராம நவமி ஊர்வலத்தின் போது  ஒரு கும்பல் அந்த குழுவினரை நோக்கி கற்களை வீசியது. இதனையடுத்து அங்கு கலவரம் வெடித்தது. கர்கோன் கல்வீச்சு எதிரொலியாக 4 வீடுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதனையடுத்து அரசு நிர்வாகம் தலாப் சௌக், கவுஷாலா மார்க் மற்றும் மோதிபுரா பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை விதித்தது.

கர்கோன் சம்பவம்

கர்கோன் வன்முறை தொடர்பாக மத்திய பிரதேச பா.ஜ.க. தலைவர் வி.டி. சர்மா கூறுகையில், கர்கோன் வன்முறை சம்பவம் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் திட்டமிட்ட சதி உள்ளதாக குற்றம் சாட்டினார். இது தொடர்பாக வி.டி. சர்மா கூறியதாவது: மத்திய பிரதேசம் அமைதியான மாநிலம். அப்படிப்பட்ட மாநிலத்தில் ஊர்வலம் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா போன்ற அமைப்புகளின் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதியை குறிக்கிறது. 

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா

தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான திக்விஜய சிங் போன்றவர்கள் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவை ஊக்குவிக்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.