நாட்டை 55 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் வறுமையை ஒழிப்போம் என்றார்கள் ஆனால் ஒழிக்கப்படவில்லை.. புஷ்கர் சிங் தாமி

 
புஷ்கர் சிங் தாமி

நம் நாடு ஒரே கட்சியால் தொடர்ந்து 55 ஆண்டுகளாக ஆட்சி செய்யப்பட்டது, அப்போது வறுமையை ஒழிப்போம் என்றார்கள் ஆனால் வறுமை ஒழிக்கப்படவில்லை என காங்கிரஸை உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தாக்கினார்.

உத்ரகாண்டில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்து கொண்டது. அந்த தேர்தலில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தோல்வி அடைந்தார். இருப்பினும், பா.ஜ.க. தலைமை அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கியது. இதனையடுத்து அவர் மாநில முதல்வராக பொறுப்பேற்று கொண்டார். முதல்வராக பதவியேற்ற 6 மாதத்துக்குள் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டால் மட்டுமே அவர் தொடர்ந்து முதல்வர் பதவியில் நீடிக்க முடியும். இதனையடுத்து சம்பாவத் சட்டப்பேரவை தொகுதியின் பா.ஜ.க. எம்.எல்.ஏ. கைலாஷ் கெஹ்டோரி தனது பதவியை ராஜினாமா செய்து இடைத்தேர்தலில் புஷ்கர் சிங் தாமி போட்டியிட வழி செய்தார்.

பா.ஜ.க.

சம்பாவத் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் இம்மாதம் 31ம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலின் கடைசி பிரச்சார  நாளான நேற்று தனக்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் அந்த தொகுதியின் வேட்பாளரும், முதல்வருமான புஷ்கர் சிங் தாமி கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் புஷ்கர் சிங் தாமி உரையாற்றுகையில் கூறியதாவது: இடைத்தேர்தலுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது, நீங்கள் அனைவரும் ஒரு சாதனை படைப்பீர்கள் என இன்று நான் இங்கு சொல்ல வந்துள்ளேன்.

காங்கிரஸ்

இது இப்போது ஒரு கட்சி கருத்துக் கணிப்பு கூட இல்லை. பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளை சேர்ந்த சிலர், இப்போது அனைவரும் தங்கள் வாக்குகளை என்ககு அளிப்பதாக சொல்கிறார்கள். நம் நாடு ஒரே கட்சியால் தொடர்ந்து 55 ஆண்டுகளாக ஆட்சி செய்யப்பட்டது, அப்போது வறுமையை ஒழிப்போம் என்றார்கள் ஆனால் வறுமை ஒழிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.