உத்தர பிரதேசத்தில் அனுமதியின்றி எந்தவொரு மத ஊர்வலம், ஊர்வலம் நடத்த அனுமதி கிடையாது.. யோகி உத்தரவு

 
யோகி

உத்தர பிரதேசத்தில் அனுமதியின்றி எந்தவொரு மத ஊர்வலம், ஊர்வலம் நடத்த அனுமதி கிடையாது என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

அண்மையில் நம் நாட்டின் சில பகுதிகளில் ராம நவமியன்று நடந்த மத ஊர்வலங்களின் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. இது இரு சமூகத்துக்கும் இடையிலான மோதலாக வெடித்தது. இதனால் நாடு முழுவதும் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், அடுத்த மாதம் ஈத் பண்டிகை மற்றும் அக்சய திருதியை ஒரே நாளில் வர வாய்ப்புள்ளது மேலும் பல பண்டிகைகள் வரும் நாட்களில் வரிசையாக வர உள்ளன. இதனால் உத்தர பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு பராமரிக்க தேவையான நடவடிக்கைகளை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் எடுத்து வருகிறார்.

ராம நவமி ஊர்வலம்

உத்தர பிரதேசத்தில் கடந்த திங்கட்கிழமையன்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் சட்டம்-ஒழுங்கு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், ஒவ்வொருவருக்கும் அவரவர் மத சித்தாந்தத்தின்படி அவரவர் வழிபாட்டு முறையை பின்பற்ற சுதந்திரம் உள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறை கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உத்தர பிரதேச மாநிலத்தில் அனுமதியின்றி எந்தவொரு மத ஊர்வலம், ஊர்வலம் நடத்த அனுமதி கிடையாது. ஒலி பெருக்கிகளை பயன்படுத்துவதால் பிறருக்கு இடையூறு  ஏற்படக்கூடாது என அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

சத்தமே வரக்கூடாது.. ஒலி மாசுபாட்டிற்கு கடுமையான அபராதம்.. உத்தரகாண்ட் அரசு முடிவு

உத்தர பிரதேச முதல்வரின் அதிகாரப்பூர்வ டிவிட்டரில், உரிய அனுமதியின்றி ஊர்வலம்/ மத ஊர்வலம் நடத்தக்கூடாது. ஊர்வலம் அல்லது மத ஊர்வலங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதற்கு முன்னர் அனைத்து அமைப்பாளர்களும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேணுவதாக உறுதியளிக்கும் பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசாங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த மத பாரம்பரிய விழாக்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் மற்றும் புதிய நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்படாது என பதிவு செய்யப்பட்டுள்ளது.