3 மாதத்துக்குள் அமைச்சர்கள் அனைத்து சொத்து விவரங்களை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.. யோகி ஆதித்யநாத் உத்தரவு

 
யோகி

உத்தர பிரதேசத்தில் அமைச்சர்கள் தங்களது மற்றும் தங்களுடைய  குடும்ப உறுப்பினர்களின் அனைத்து சொத்து விவரங்களையும் 3  மாதத்துக்குள் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.


உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நேற்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு நடைபெற்ற சிறப்பு அமர்வில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசுகையில் கூறியதாவது: ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் மாகாண சிவில் சர்வீஸ் அதிகாரிகள் தங்களது மற்றும் தங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்களை அறிவித்து, மக்கள் பாா்ப்பதற்கு வசதியாக ஆன்லைன் வலைத்தளத்தில் கிடைக்க செய்ய வேண்டும். ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு மக்கள் பிரதிநிதிகளின் நடத்தை மிகவும் முக்கியமானது. 

சொத்து விவரங்கள் அறிவித்தல்

இந்த உணர்வின்படி, அனைத்து அமைச்சர்களும் தங்கள் மற்றும் தங்களது  குடும்ப உறுப்பினர்களுக்கும் உள்ள அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பதவியேற்ற அடுத்த 3 மாதங்களுக்குள் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். அரசு பணியில் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் தலையீடு இல்லை என்பதை அனைத்து அமைச்சர்களும் உறுதி செய்ய வேண்டும். நமது நடததை மூலம் நாம் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அனைத்து துறைகளுக்கும் அடுத்த 100 நாட்கள், 6  மாதங்களுக்கு மற்றும் அடுத்த 5 ஆண்டுகளுக்கான செயல் திட்டம் விளக்கப்பட்டுள்ளது.  அது இப்போது களத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும். 

மோடி

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் திட்டங்களை முடிக்க அதிகாரிகளுக்கு அனைத்து துறைகளும் வழிகாட்ட வேண்டும். பிரதமரின் வழிகாட்டுதலின்படி, அந்தியோதயா (கடைசி நபரின் எழுச்சி)  தீர்மானத்தை நிறைவேற்ற, நாம் அனைவரும் பாடுகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, உள்ளூர் தலைவர்கள் மற்றும் முக்கிய நபர்களுடன் சந்திப்பு நடத்தி மக்களின் பிரச்சினைகளை அறிந்து கொள்ள தலா ஒரு கேபினட் அமைச்சர் தலைமையில் 18 குழுக்கள் அமைத்துள்ளார். அமைச்சர்கள் திங்கள் மற்றும் செவ்வாய் மட்டும் தலைநகர் லக்னோவில் இருக்க வேண்டும். வெள்ளி முதல் ஞாயிறு வரையிலான 3 தினங்களிலும் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.