எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை இயல்பாக நடத்த அனுமதிக்கவில்லை. .. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றச்சாட்டு

 
சட்டப்பிரிவு 370 ரத்து.. காஷ்மீர் வளர்ச்சிக்காக பல தசாப்தங்களாக இருந்த இருளை மோடி நீக்கினார்.. பியூஸ் கோயல்

எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை இயல்பாக நடத்த அனுமதிக்கவில்லை என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் பல்வேறு விவகாரங்களில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஏற்படுத்திய அமளியால் தொடர்ந்து 2 முறை அவை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்றம் இயல்பாக செயல்பட அனுமதிக்கப்படாதது குறித்து மத்திய அமைச்சர்கள்  பியூஸ் கோயல் மற்றும் பிரகலாத் ஜோஷி தங்களது கவலையை தெரிவித்தனர். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம்  மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஸ் கோயல் கூறியதாவது: பணவீக்கம் குறித்து விவாதிக்க முதல் நாள் முதலே மத்திய அரசு தயாராக உள்ளது. 

நாடாளுமன்றம்

ஆனால் எதிர்க்கட்சிகள் மக்களவையை இயல்பாக நடத்த அனுமதிக்கவில்லை. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கோவிட்-19 இருந்தது, அவர் இப்போது குணமடைந்து விட்டார் என்பதை அறிந்து, சபை வழக்கம் போல் செயல்படும்படி அவர்களிடம் (எதிர்க்கட்சிகள்) வேண்டுகோள் விடுக்கிறோம். விலைவாசி உயர்வு குறித்து மக்களவையில் திங்கள்கிழமையும் (நேற்று), மாநிலங்களவையில் செவ்வாய்கிழமையும் (இன்று) விவாதிக்கப்படும் என ஏற்கனவே முடிவு செய்துள்ளோம். 

பிரகலாத் ஜோஷி

இருந்தபோதிலும் அவை இயங்க அனுமதிக்கப்படவில்லை, அவர்கள் பிரச்சினையை விவாதிக்காமல் ஓடுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். மத்திய நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், எதிர்க்கட்சிகள் உண்மையிலேயே ஆர்வமாக இருந்தால், அவர்கள் அவையை இயல்பாக செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.