ராணுவம் ஒரு வேலைவாய்ப்பு நிறுவனமோ அல்லது நிறுவனமோ அல்லது கடையோ அல்ல.. விருப்பம் இருந்தால் வாங்க.. வி.கே. சிங்

 
வி.கே.சிங்

ராணுவம் ஒரு வேலைவாய்ப்பு நிறுவனமோ அல்லது நிறுவனமோ அல்லது கடையோ அல்ல, ராணுவத்தில் சேர்வது தன்னார்வமே தவிர கட்டாயம் அல்ல என மத்திய அமைச்சரும், முன்னாள் ராணுவ தலைமை தளபதியுமான வி.கே. சிங் தெரிவித்தார்.


இந்திய இளைஞர்களை ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணியமர்த்துவதற்கான மத்திய அரசின் அக்னிபாத் திட்டம் கடந்த 14ம் தேதி அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் பல மாநிலங்களில் அக்னிபாத் திட்டத்துக்கு  இளைஞர்களில் ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சில மாநிலங்களில் ரயில் மறியல், ரயில் எரிப்பு மற்றும் வன்முறை சம்பவங்களில் அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான போராட்டக்காரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வன்முறையில் ஈடுபட்டனர். மேலும், எதிர்க்கட்சிகள் இந்த திட்டத்தை கை விட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். 

மீண்டும் இந்திய எல்லைக்குள் முகாம் அமைக்கும் சீன ராணுவம்.. உறுதிப்படுத்தும் சாட்டிலைட் புகைப்படங்கள்


இந்நிலையில், ராணுவத்தில் சேர்வது கட்டாயம் அல்ல விருப்பம் இருந்தால் வரலாம் என மத்திய அமைச்சர் வி.கே. சிங் தெரிவித்தார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சரும், முன்னாள் ராணுவ தலைமை தளபதியுமான வி.கே.சிங் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் வி.கே.சிங் பேசுகையில் கூறியதாவது: ராணுவத்தில் சேர்வது தன்னார்வமே தவிர கட்டாயம் அல்ல. ஆர்வமுள்ளவர்கள் யாரேனும் சேர விரும்பினால், அவர் விருப்பப்படி சேரலாம். நாங்கள் ராணுவ வீரர்களை கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் இந்த ஆட்சேர்ப்புத் திட்டம் (அக்னிபாத்) உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் (சேர) வர வேண்டாம். 

அக்னிபாத் திட்டம்

உங்களை யார் வரச் சொன்னது? நீங்கள்  பேருந்துகள் மற்றும் ரயில்களை எரிக்கிறீர்கள், ஆயதப்படையில் நீங்கள் சேர்க்கப்படுவீர்கள் என்று உங்களிடம் யார் சொன்னார். நீங்கள் தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே நீங்கள் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ராணுவம் ஒரு வேலைவாய்ப்பு நிறுவனமோ அல்லது நிறுவனமோ அல்லது கடையோ அல்ல. நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் மக்கள் ராணுவத்தில் இணைகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.